அரசியல்வாதியோடு வாதிடலாம் அரசியல் வியாபாரிடம் எப்படி விவாதிப்பது? அண்ணாமலைக்கு ஜெயக்குமார் பதிலடி!
சென்னை விமான நிலையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சில பேருக்கு மேனியா உள்ளது போல் அண்ணாமலை பேசி வருகிறார். பாஜக தலைவரான அண்ணாமலை எதற்கும் லாய்க்கில்லாதவர் மெச்சூரிட்டி இல்லாதவர் இம் மெச்சூரிட்டி நபர்.
பக்குவப்படாத அரசியல்வாதி அண்ணாமலை தான். சுட வச்ச பாலை குடித்தவுடன் நாக்கு சுட்டும் மோரை பார்த்தா கூட ஊதி ஊதி குடிப்பான். அது போல அண்ணாமலைக்கு எவ்வளவு தான் திருப்பி அடித்தாலும் வாங்கிக் கொள்கிறார் என்பது போல் அண்ணாமலை போக்கு காட்டி வருகிறது. அண்ணாமலை சூடு சொரணை மானம் இருக்கணும்.
அண்ணாமலையின் கருத்து தமிழ்நாடு மக்கள் அல்லாமல் உலகம் முழுவதும் இருக்கக்கூடிய தமிழர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத கருத்து. தன்னுடைய ஆட்சிக்காலத்தில் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், பிற சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த அத்தனை பேருக்கும் ஒரு மத நல்லிணக்கத்தோடு வாழக்கூடிய அளவிற்கு ஒரு நல்ல சூழ்நிலையை தமிழ்நாட்டில் ஏற்படுத்தி காட்டியவர்.

பாஜகவில் தலைவர்கள் இல்லையா பாஜகவை வளர்க்க கஷ்டப்பட்டவர் அத்வானி, வாஜ்பாய். அவர்களை பற்றி ஏன் பேச மறுக்கிறார் அண்ணாமலை.
திமுகவின் பி டீமாக செயல்படுகிறார். நாட்டில் எவ்வளவோ பிரச்சனை இருக்கிறது சட்டம் ஒழுங்கை பற்றி அண்ணாமலை வாய் திறக்கிறாரா நதிநீர் பிரச்சனை பற்றி உச்சநீதிமன்ற தீர்ப்பை வாங்கி கொடுத்தும் அதை செயல்படுத்த வக்கில்லாமல் திமுக உள்ளது. அதை கண்டிக்க அண்ணாமலைக்கு திராணி இல்லை.
அம்மாவை ஒரு மதத்துக்குள் அடக்கும் வகையில் ஒரு இழிவான செயலை செய்து வருகினாறனர். அண்ணாமலை அரசியல்வாதி அல்ல அரசியல் வியாதி அல்லது அரசியல் வியாபாரி என விமர்சனம் செய்தார். ஒரு ஆளுநராக இருந்த தமிழிசை தவறான தகவலை கூறலாமா? கரை சேவைக்கு ஆட்களை அனுப்பினார் என்று கூறுகிறார். ஜெயலலிதா அதை பேசினார்கள் என்று கூறுவது பொறுப்பெற்ற முறையில் பேசுவது முகம் சுளிக்க வகையில் இருக்கிறது. எடுத்துக்காட்டுங்கள் கரை சேவைக்கு ஆள் அனுப்ப அம்மா சொன்னார்கள் என்றால் தான் அரசியல் விட்டு நான் விளக்க தயாராக இருக்கிறேன் என தெரிவித்தார்.
ராமர் கோவில் கட்ட வேண்டும் மசூதியும் இருக்க வேண்டும் அதுதான் அம்மா விரும்பினார்கள். தோல்வியின் உச்சக்கட்டத்தை நோக்கி பாஜக சென்று கொண்டிருக்கிறது. மேல் இருப்பவர்களும் வாய்க்கு வந்தபடி பேசுகிறார்கள் கீழ் இருப்பவர்களும் அப்படி பேசிக் கொண்டிருக்கிறார்கள் என கூறினார்.
கொலை கொள்ளை கற்பழிப்பு ஆள் கடத்தல் கஞ்சா போதை புழக்கம் அதிகமாக இருப்பதில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இதையெல்லாம் பற்றி அண்ணாமலை என்றைக்காவது பேசியிருக்கிறாரா எனவும் அதிமுகவைப் பற்றி பேச வேண்டும் அதிமுகவிரிடம் வாங்கி கட்டிக்க வேண்டும் என அண்ணாமலை பேசி வருகிறார்.
தெய்வ பற்று இருப்பதால் நீங்கள் எல்லோரும் மதவாதிகளா எனவும் தெய்வ பத்தி அம்மாவுக்கு இருந்தது. ஆனால் மத பிரிவினை கிடையாது. இந்த அடிப்படை விஷயம் கூட தெரியாத ஒரு அரை வேக்காடு தான் அண்ணாமலை.

அண்ணாமலை எந்த காரிலில் வந்தார். இன்று என்ற காரில் போகிறார். உழைத்த சம்பாதித்தாத அனைத்தும் ஊழலிலும் உருவமாக உள்ளது. பிஜேபி மக்களை ஏமாற்றியுள்ளது. ஒரு அரசியல் வியாபாரி அறவேக்காடு இவர்களோடு நாங்கள் சென்று விவாதம் செய்ய வேண்டுமா அரசியல்வாதியோடு விவாதிக்கலாம் அரசியல் வியாபாரி விவாதிக்க தயாராக இல்லை.
பிஜேபி தமிழ்நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு என்ன செய்தது? திமுக சிறுபான்மை மக்களுக்கு என்ன செய்தது? அதிமுக சிறுபான்மை மக்களுக்கு என்ன செய்தது என்று ஒப்பீடு போட்டு உங்களுக்கு கொடுக்கிறேன். அதை பாருங்கள். இஸ்லாமிய மக்களுக்கு திட்டங்களை கொண்டு வந்தது அதிமுக தான்.
இஸ்லாமிய மக்களுக்கு அமைதியை கொடுத்தது அதிமுக. பாபர் மசூதி இடிப்பு சமயத்தில் ஒரு இஸ்லாமியர்களுக்கு இங்க பாதிப்பு இருந்ததா தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்ந்தது என தெரிவித்தார்.
அவருக்கு வேறு வழி இல்லை எங்க தலைவர்களைப் பற்றி பேசி வாங்கி கட்டி கொள்கிறார்கள். எப்படி பேசினாலும் ஓட்டு விழாது என தெரிவித்தார். ரேஷன் கடையில் பாமாயில் கிடையாது சர்க்கரை அரிசி மற்ற பொருட்கள் இல்லை. அடுத்த மாசம் வாங்க எனக் கூறுகிறார்கள். அடுத்த மாதம் வரை வயிற்றில் துணியை கட்டியிருப்பார்களா என கேள்வி எழுப்பினார்கள். எது எப்படி என்றாலும் 2026ல் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அமைப்பார்” என கூறினார்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
