ரூ.2000 நோட்டை எப்படியெல்லாம் மாற்றலாம்... ரிசர்வ் வங்கியின் முழு விளக்கம்!

 
ரூபாய் நோட்டு பணம் டாலர்

ரூ 2000 நோட்டு செப்டம்பர் 30ம் தேதியோடு வாபஸ் பெறுவது பற்றி கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்த ரிசர்வ் வங்கி, கூடுதல் விளக்கங்களை கேள்வி பதில் வடிவில் வெளியிட்டுள்ளது அதல் கூறப்பட்டுள்ள தகவல்கள் உங்களுக்காக...

2000 ரூபாய் நோட்டுக்கள் ஏன் வாபஸ் பெறப்படுகின்றன?

2016 நவம்பரில் ரூபாய் 500, ரூபாய் 1000 நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்ட போது, நோட்டு தேவையை விரைவாக பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ரூபாய் 2000 நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது இந்த நோக்கம் நிறைவேறியதும், ரூபாய் 2000 நோட்டு அச்சிடும் பணி 2018 நிறுத்தப்பட்டது. புழக்கத்தில் உள்ள ரூபாய் 2000 நோட்டுக்களில் பெரும்பாலானவை 2017 மார்ச்சில் அச்சிடப்பட்டவை அவற்றின் பயன்பாட்டுக்காலம் முடிவுக்கு வந்துள்ளது பிற ரூபாய் நோட்டுகள் போதுமான அளவுக்கு புழங்குகின்றன எனவே ரிசர்வ் வங்கியின் கிளீன் நோட்டு சிரமம் கொள்கைப்படி இந்த வாபஸ் நடக்கிறது.

'கிளீன் நோட்டு' கொள்கை என்றால் என்ன?

இது மக்களுக்கு தரமான ரூபாய் நோட்டுக்கள் கிடைக்கச் செய்வதற்கான கொள்கை

ரூபாய் 2000 நோட்டு செல்லுமா? பயன்படுத்தலாமா? என்ன செய்யலாம்?

ரூபாய் 2000 செல்லுபடியாகும் அதை பயன்படுத்தி, பணப்பரிமாற்றம் செய்யலாம் எனினும், மே 23ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதிக்குள் ரூபாய் 2000 நோட்டுக்களை வங்கியில் செலுத்திவிட வேண்டும். வங்கிகளில் டெபாசிட் செய்ய வேண்டும் அல்லது மாற்றிக் கொள்ள வேண்டும்.

ஏடிஎம் வங்கி டெபிட் கார்டு

2000 நோட்டுக்களை ஒருவர் மாற்ற என்ன செய்ய வேண்டும்?

வங்கிகளுக்குச் சென்று வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யலாம் வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்கு கட்டணம் உண்டா? வங்கிகளில் ர2000 நோட்டுக்களைக் கொடுத்து வேறு நோட்டுக்களாக மாற்றிக் கொள்ளலாம். ரிசர்வ் வங்கியின் 19 மண்டல அலுவலகங்களிலும் ரூபாய் 2000த்தை  மாற்றலாம் மே 23ம் தேதி முதல் செப்டம்பர்  30ம் தேதி வரை எல்லா வங்கிகளிலும் இதற்கான சிறப்பு வசதிகள் செய்யப்படும் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு குறைக்க செய்யுமாறு வங்கிகள் கேட்டுக் கொள்ளலாம் 

வங்கிக்கணக்கில் ரூபாய் 2000 செலுத்த வரம்பு இருக்கிறதா?

ஏற்கனவே உள்ள உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் (KYC) விதிமுறைகள் மற்றும் சட்டபூர்வ ஒழுங்கு முறை விதிகளுக்கு உட்பட்டு, எந்தவித வரம்பும் இல்லாமல், வங்கிக் கணக்கில் ரூபாய் 2000 நோட்டுக்களை டெபாசிட் செய்யலாம்

வங்கியில் நோட்டுக்களை மாற்றச் செல்பவர் அதே வங்கியில் கணக்கு வைத்திருக்க வேண்டுமா?

வங்கிக் கணக்கு இல்லாதவரும் வங்கியில் ஒருமுறை ரூபாய் 20 ஆயிரம் வரை நோட்டுக்களை மாற்ற முடியும் எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது வங்கிக் கணக்கில் ரூபாய் 2000 நோட்டுக்களை டெபாசிட் செய்ய எந்த கட்டுப்பாடும் இல்லை டெபாசிட் செய்தபின், அதில் இருந்து தேவையான பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.

அதிர்ச்சி!! நாடு முழுவதும் 2 நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்!! இந்த வாரம் 3 நாட்கள்  வங்கிகள் செயல்படாது!!

ரூபாய் 2000 டெபாசிட் மற்றும் மாற்றிக் கொடுக்க வங்கிகள் மறுத்தால் என்ன செய்வது ?

வங்கி நிர்வாகத்திடம் புகார் கொடுக்கலாம் 30 நாட்களுக்குள் வங்கி நிர்வாகம் பதில் அளிக்கவில்லை அல்லது பதில் திருப்திகரமாக இல்லை என்றால் ஒருங்கிணைந்த குறைதீர்ப்பு திட்டத்தின்கீழ், ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில்  www.rt.org.in புகார் மேலாண்மை பிரிவில் முறையீடு செய்யலாம்

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்ததை தொடர்ந்து டெபாசிட் வசதியுடன் கூடிய ஏடிஎம்() மெஷின்களில் அதிரடி மாற்றங்களை வங்கிகள் ஏற்படுத்தியுள்ளன இதுவரை இந்த மெஷினில் ஏடிஎம் கார்டு உதவியுடன் பணம் டெபாசிட் செய்வது மட்டுமல்லாமல் வங்கி கணக்கு எண்ணை உள்ளிட்டு டெபாசிட் செய்யும் வசதியும் இருந்து வந்தது இதனால் வேறு ஒருவரின் வங்கி கணக்கு எண் தெரிந்திருந்தால் அவரது வங்கி கணக்கில் யார் வேண்டுமானாலும் பணம் செலுத்தலாம் இப்போது வங்கி கணக்கு எண்ணை உள்ளீடு செய்து மெஷினில் பணம் டெபாசிட் செய்யும் வசதியை ஏடிஎம் மெஷின்களில் வங்கிகள் செயலிழக்க செய்துள்ளன. இனி ஏடிஎம் கார்டு வைத்திருப்பவர் மட்டுமே மெஷின் மூலம் பணம் டெபாசிட் செய்ய முடியும். இதன் மூலம் யாரிடம் இருந்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வருகிறது என்பதை தெரிந்து கொள்ள இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது 

அடையாளச்சான்று வேண்டாம் : எஸ்பிஐ

இதனிடையே ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) வெளியிட்ட சுற்றறிக்கையில், ரூ.2000 நோட்டை வங்கிகளில் மாற்றுவதற்கு ஏதாவது அடையாளச் சான்று கட்டாயம் என்று கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், எஸ்பிஐ நேற்று வெளியிட்ட விளக்கத்தில், ரூ.20,000 வரையிலான மதிப்பில் ரூ 2000 நோட்டுகளை மாற்றுவதற்கு கோரிக்கை கடிதமோ, அடையாளச் சான்றோ தேவையில்லை என்று அறிவித்துள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

From around the web