வளர்ப்புப்பிராணிகளுக்கு உரிமம் பெறுவது எப்படி?... முழு தகவல்கள்!

 
நாய்

 தமிழகத்தில் பல பகுதிகளில் வெறிநாய்க்கடி அதிகரித்து மக்கள் பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். சமீபத்தில் சென்னையில் பூங்கா ஊழியரின் 6 வயது சிறுமியை வளர்ப்பு நாய் 2 கடித்து குதறி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் மாநகராட்சி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து பெருநகர சென்னை மாநகராட்சியில் செல்லப்பிராணிகள் வளர்ப்பதற்கு உரிமம் பெறுவது கட்டாயம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, உரிமம் பெறுவதற்கான வழிமுறைகளை பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

நாய்


இதன்படி பெருநகர சென்னை மாநகராட்சியின் (www.chennaicorporation.gov.in) இணையதளத்திற்குச் சென்று 'இணையதள சேவைகள்'(Online Services) என்பதை தேர்வு செய்ய வேண்டும்.  அதில் உள்ள பல சேவைகளில் 'செல்லப்பிராணிகளின் உரிமம்'(Pet Animal License) என்பதை தேர்வு செய்ய வேண்டும்.இதைத் தொடர்ந்து 'புதிய பயனர்'(New User) என்பதை தேர்வு செய்து, அதில் தங்களது விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும்.  பயனாளர் தங்களது அலைபேசி எண்ணையும், 4  இலக்க எண்ணையும் பயன்படுத்தி உள்நுழைய வேண்டும்.'புதிய செல்லப்பிராணிகளின் உரிமம்' பக்கத்தில்  செல்லப்பிராணிகள் குறித்த அனைத்துத் தகவல்களையும் பூர்த்தி செய்ய வேண்டும்.  

நாய்

உரிமையாளரின் புகைப்படம், முகவரி, செல்லப்பிராணியின் புகைப்படம், ஒரு வருடத்திற்குள்ளாக வெறிநாய்க்கடி, நோய்த்தடுப்பு ஊசி செலுத்தியதற்கான சான்று இவைகளை இணைக்க வேண்டும்.  இதனை மண்டல கால்நடை உதவி மருத்துவர் அங்கீகரித்த பிறகு, பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணிற்கு பணம் செலுத்துவதற்கான குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படும். உரிமையாளர்கள் தங்களது பெருநகர சென்னை மாநகராட்சி இணையதள பக்கத்தில்   'இணைய முகப்பு'(Portal) பக்கத்திற்கு சென்று இணைய வழியில் ரூ50  பணம் செலுத்த வேண்டும்.  'செல்லப்பிராணிகளின் உரிமம்'(Pet Animal License) பதிவிறக்கம் செய்வதற்கான 'இணைப்பு'(Link) உருவாகும். அதனை கொண்டு பயனாளர்கள் தங்கள் செல்லப்பிராணிகளுக்கான உரிமத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web