ஜூலை 19ல் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்.. முன்பதிவு, முழு விபரங்கள்!

 
வேலை வாய்ப்பு முகாம்

 தூத்துக்குடியில் வருகிற 19ம் தேதி மாபெரும்  தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக / நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 19.07.2025 அன்று தூத்துக்குடி புனித மரியன்னை கல்லூரியில் காலை 8.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை நடைபெறவுள்ளது. 

வேலை வாய்ப்பு முகாம்

இம்முகாமில் 200-க்கும் மேற்பட்ட பல்வேறு முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்கவுள்ளனர். இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் டிரைவர் உள்ளிட்ட 8-ம் வகுப்பு, 10ம் வகுப்பு தேர்ச்சி / தோல்வி, பன்னிரெண்டாம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, அக்ரி, செவிலியர், ஆசிரியர் தகுதி, இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகள் மற்றும் பொறியியல் பட்டப்படிப்புகள் போன்ற கல்வித் தகுதிகளையுடைய 18 வயது முதல் 40 வயதிற்குட்பட்ட வேலைநாடுநர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோரை தேர்வு செய்ய உள்ளனர். 

வேலைவாய்ப்பு முகாம்

விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் (CANDIDATES) https://forms.gle/1M1DALgQTZUobfrK6 கூகுள் படிவத்தை 18.07.2025 ஆம் தேதிக்கு முன்னதாக சமர்ப்பித்து தங்கள் வருகையை உறுதி படுத்திக்கொள்ளவும் என்று தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?