பெரும் பரபரப்பு... திருப்பதி மலைப்பாதையில் இருந்து குதித்த பக்தர்!
திருமலை திருப்பதியில் முதலாவது மலைப்பாதை சாலை மொக்கால மெட்டு அருகே அவ்வாச்சாரி கோனா பள்ளத்தாக்கில் இருந்து ஒரு பக்தர் குதித்துவிட்டதாக பக்தர்கள் தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தகவல் தெரிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருமலை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அந்த நபரைக் காப்பாற்ற முயற்சித்தனர்.

பள்ளத்தாக்கு மிகவும் ஆழமாகவும் அடர்த்தியாகவும் இருந்தன. தங்கள் உயிரைப் பணயம் பெரிய கயிறுகளின் உதவியுடன் பள்ளத்தாக்கிற்குள் சென்று, பின்னர் ஏணிகளை அமைத்து பள்ளத்தாக்கில் இறங்கினர். சிறிது தூரம் சென்ற பிறகு, குதித்த நபர் கண்டுபிடிக்கப்பட்டது. நடக்க முடியாததால், அவருக்கு கயிறுகளைக் கட்டி, ஸ்ட்ரெச்சர் பயன்படுத்தி பள்ளத்தாக்கிலிருந்து வெளியே கொண்டு வந்தனர்.

உடனடியாக திருமலை அஸ்வனி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது தனிப்பட்ட விவரங்களைத் தெளிவாகக் கூற முடியாத நிலையில் அவர் தனது பெயர் ராயுடு எனவும், சில சமயங்களில் அல்லகட்டா, சில சமயங்களில் தாடிபத்ரி சொந்த ஊர் எனவும் கூறுகிறார். சிகிச்சைக்குப் பிறகு முழு விவரங்களையும் விசாரித்து உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என திருமலை போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
