நீட்... தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம்!

 
மானவர்கள் போராட்டம்

 நீட் தேர்வு முடிவுகள் வெளியானதில் குளறுபடி, மற்றும் வினாத்தாள் கசிவு இவைகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில்  தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை, திருச்சி, மதுரை, கோவை, தூத்துக்குடி, நாமக்கல் உட்பட பல   நகரங்களிலும் மாணவர்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். சென்னையை பொறுத்தவரை  நுங்கம்பாக்கத்தில் சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீட்

அப்போது மாணவர்களை போலீசார் அப்புறப்படுத்தும் போது மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் சிறிது நேரம்  அப்பகுதியில்  பதற்றம் நிலவியது.   கடலூரில் தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு  மாணவர்கள் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.  உச்சநீதிமன்றத்தில் நீட் தேர்வில் குளறுபடிகள் நடைபெற்று இருப்பதாகவும் மறு தேர்வு நடத்த வேண்டும் எனக்கோரியும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த வழக்கு அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இதனால் மாணவர்கள் பெரும் கொந்தளிப்பில் உள்ளனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web