ஆகஸ்ட் 2ம் தேதி கட்சித் தலைவர் வைகோவுக்கு எதிராக உண்ணாவிரதம்... மல்லை சத்யா திடீர் அறிவிப்பு.!
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக (மதிமுக) துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா. இவர் தனது கட்சித் தலைவர் வைகோவுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்துள்ளார். இந்தப் போராட்டத்திற்கு முக்கியக் காரணம், வைகோ தன்னை “துரோகி” எனக் கூறி சிறுமைப்படுத்தியதாக குற்றம்சாட்டியுள்ளார். 32 ஆண்டுகால பொது வாழ்க்கையை கேள்வியாக்கும் வகையில் வைகோவின் இந்தக் குற்றச்சாட்டு அமைந்ததாகக் கூறியுள்ளார்.

மதிமுகவில் வைகோவின் மகன் துரை வைகோவை முன்னிறுத்தும் வாரிசு அரசியல் மற்றும் கட்சியில் நீண்டகால உழைப்பை அவமதிக்கும் செயல்கள் குறித்து மல்லை சத்யா அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளார். இதனால், கட்சியில் பிளவு ஏற்படலாம் எனவும் சில அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சேப்பாக்கம் சிவானந்தா சாலையில் ஆகஸ்ட் 2 காலை 9 முதல் மாலை 5 மணி வரை இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உண்ணாவிரதம் மக்களிடம் நீதி கேட்கும் வகையில் அடையாளப் போராட்டமாக நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
