கணவன் - மனைவி சண்டை.. மகனை ஏரியில் வீசிவிட்டு தந்தையும் தற்கொலை!

 
மோகன்ராஜ்

தாம்பரம்-மதுரவாயல் நெடுஞ்சாலையில் நேற்று முன் தினம் போரூர் ஏரிக்கு மேல் சாலையில் சிறுவனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் திடீரென மோட்டார் சைக்கிள் முன் அமர்ந்திருந்த  சிறுவனை போரூர் ஏரியில் வீசிவிட்டு மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு வேகமாக சென்றார்.இதை உடனடியாக ஏரியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்கள் பார்த்தனர்.  ஏரியில் வீசப்பட்ட சிறுவனை உயிருடன் மீட்டனர். இதையடுத்து, அப்பகுதி மக்கள் போரூர் போலீசில் புகார் செய்தனர்.

இதுகுறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் போரூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். காவல் துறையினரின் விசாரணையில், குழந்தையை தலைமைச் செயலகத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் ஏரியில் வீசியது தெரியவந்தது. மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவியை வீட்டில் வைத்து கதவை வெளியில் பூட்டிவிட்டு ஆத்திரத்தில் 3 வயது மகனை தூக்கி வந்து போரூர் ஏரியில் வீசியது தெரிய வந்தது. பின்னர் போலீசார் சிறுவனை சிறுவனின் தாய் பிரியாவிடம் ஒப்படைத்தனர்.

குடும்ப தகராறு காரணமாக மகனை ஏரியில் வீசிய தந்தையை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் போரூர் ஏரியில் ஆண் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்தது மூன்று வயது மகனை ஏரியில் வீசிய தந்தை மோகன்ராஜ் என்பது தெரியவந்தது.

மோகன்ராஜ் தனது 3 வயது மகனை ஏரியில்  உயிருடன் வீசப்பட்டதை நினைத்து மனமுடைந்த அவர் ஏரியில் குதித்து தற்கொலை செய்து  கொண்டிருக்கலாம்
 என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது சடலத்தை போரூர் போலீசார் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web