பிறந்த நாளில் சோகம்... கேக் வெட்டி... மனைவி, மகளைக் கொன்று கணவர் தற்கொலை!
மனைவியின் பிறந்த நாளில் குடும்பமே தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
மதுரை, நரிமேடு, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வீதியைச் சேர்ந்தவர் காளிமுத்து(42). கார்பென்டர். இவர் மனைவி ஜாக்குலின் ராணி(36). மகள் மதுமிதா(12). நேற்று ஜாக்குலின் ராணியின் பிறந்தநாள் என்பதால் கேக் வெட்டி குடும்பத்துடன் வீட்டில் கொண்டாடியுள்ளனர். பின், கூடல்நகர் ரயில் நிலையத்துக்கு சென்ற காளிமுத்து, ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார்.
மதியம் 2 மணியளவில் காளிமுத்துவுக்கு அவரது உறவினர் செல்போனில் அழைத்துள்ளார். அவர் அழைப்பு எடுக்கப்படவில்லை. இந்நிலையில் காளிமுத்துவின் வீட்டிற்கு அருகில் வசிப்பவர்கள், வீட்டுக் கதவை தட்டியபோது கதவு திறக்கப்படாமல், உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. ஜன்னல் வழியாக பார்த்தபோது ஜாக்குலின் ராணி, மகள் மதுமிதா தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தனர்.
குடும்பமே தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து, செல்லூர் போலீசார் விசாரித்துள்ளனர். காளிமுத்து இறக்கும் முன், அவரது செல்போனில் மனைவியுடன் பிறந்தநாள் கொண்டாடியது குறித்தும், தற்கொலை செய்யும் முன் விடைபெறுகிறேன் எனக்கூறியும் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. எனினும் தற்கொலைக்கான காரணம் குறித்து விவரமாக அறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!