காதல் மனைவி கழுத்தை நெரித்து, கத்தியால் குத்தி பெட்ரோல் ஊற்றி கொலை .... கணவன் பகீர் வாக்குமூலம்!
தெலங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டம், லிங்கால் மண்டலம் ராயவரம் கிராமத்தில் வசித்து வருபவர் சைலம். இவர் மஹபூப் நகர் மாவட்டம் ஸ்ராவணியை காதலித்து 2014ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்நிலையில் ஸ்ராவணிக்கு தனது அக்காவின் கணவருடன் தகாத உறவு இருந்ததாக தெரிகிறது. இதையறிந்த சைலம், அவரை கண்டித்து வந்துள்ளார். இதனால், கணவனையும் குழந்தைகளையும் விட்டுவிட்டு, ஸ்ராவணி தனது அக்காவின் கணவருடன் சென்று விட்டாராம். ஒரு வருடத்திற்கு முன்பு மீண்டும் கணவனிடம் திரும்பி வந்தபோது, சைலம் ஸ்ராவணியை மனைவியாக ஏற்றுக்கொண்டாராம்.

இந்நிலையில் குடிபழக்கத்துக்கு ஆளான சைலம், தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்வாராம். ஸ்ராவணி அடிக்கடி செல்போனில் யாரிடமோ பேசுவதையும், சாட்டிங் செய்வதையும் கவனித்த சைலம், அவரை கண்டித்துள்ளார். இதனால், 4 மாதங்களுக்கு முன்பு ஸ்ராவணி, தனது குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்று விட்டாராம். அங்கிருந்தபடி மஹபூப் நகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து, குழந்தைகளையும் கவனித்து வந்தார். மனைவியின் நடத்தையால் கடும் கோபத்தில் இருந்த சைலம், அவரை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். அன்றிரவு மனைவிக்கு போன் செய்து, ‘தான் மாறிவிட்டதாகவும், இனி சண்டையிட மாட்டேன் காலையில் சோமசிலாவிற்கு செல்வோம்’ எனக் கூறியுள்ளார்.

உடனே ஸ்ராவணி, தனது இரு குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்பிவிட்டு, சைலத்துடன் சோமசிலாவிற்கு பைக்கில் சென்றார். கொத்தபள்ளி மண்டலத்தில் உள்ள சாதாபூருக்கு வந்தபோது சைலம், ‘சீதாப்பழங்களை சேகரித்து வரலாம்’ எனக்கூறி அவரை வனப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு, ஸ்ராவணி கழுத்தில் துப்பட்டாவை சுற்றி நெரித்து மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார். இதன் பிறகு ஸ்ராவணியின் சடலத்தின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி சென்றுவிட்டார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
