தினமும் குடித்து விட்டு டார்ச்சர் செய்த கணவன்.. ஆத்திரத்தில் மனைவி செய்த கொடூரம்.. பகீர் பின்னணி!
அசாமில் உள்ள ஜோர்ஹாட் மாவட்டத்தில் வசிப்பவர் பிரகலாத் சோரன். தேயிலைத் தோட்டத் தொழிலாளி. இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை இரவு மரியானி பகுதியில் உள்ள முர்முரியா தேயிலைத் தோட்டத்தில் அவரது பாதி எரிந்த நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டது.இதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில், சோரன் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டது தெரியவந்தது.

விசாரணையில் சோரனின் மனைவி தனது கணவரின் உடலுக்கு தீ வைத்த தகவல் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. சோரன் தினமும் குடித்துவிட்டு வந்து குடும்பத்தில் சண்டையிட்டு வந்தார். மனைவியை அடித்து உதைத்து வந்துள்ளார். மகனும் தாக்கப்பட்டுள்ளார். தினமும் பெற்றோர் சண்டை போடுவதை பார்த்து மகன் அதிர்ச்சி அடைந்தான்.

இதனால், மகனைக் காப்பாற்ற கணவனை கொல்லும் முடிவை எடுத்துள்ளார். இந்நிலையில், சோரனின் மகனான மைனர் சிறுவனும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார். சிறார் சீர்திருத்த சட்டத்தின் கீழ் சிறுவனை விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். அந்த பெண் மீது சம்பந்தப்பட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
