குடித்து விட்டு டார்ச்சர் செய்த கணவர்.. ஆத்திரத்தில் கழுத்தில் கயிற்றை கட்டி இழுத்துச் சென்ற மனைவி.. அடுத்து நடந்த விபரீதம்!
ஆந்திர மாநிலம் நிஜாம்பட்டினம் பகுதியில் வசித்து வருபவர் அமரேந்திர பாபு. தினமும் மது அருந்திவிட்டு மனைவி அருணாவை அடித்து துன்புறுத்தி வருகிறார். நேற்று முன்தினம், வழக்கம்போல் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த பாபு, மனைவியை அடித்து தகராறு செய்து, கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் ஆத்திரமடைந்த அருணா கட்டையால் பாபுவின் தலையில் அடித்தார்.
அதன்பின், பாபுவின் கழுத்தில் கயிற்றை கட்டி, தெருவில் தரதரவென இழுத்து சென்றார். இதனால் பாபு வலியால் அலறி துடித்தார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அருணாவை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் அதற்குள் கயிறு கழுத்தை அறுத்து பாபு இறந்ததாக தெரிகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதற்கிடையே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பாபு இறந்ததை உறுதி செய்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அருணாவை போலீசார் தேடி வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!