மனைவியின் படிப்பு கடனுக்காக வெளிநாடு வேலைக்குச் சென்ற கணவன்.. கேப்பில் இன்ஸ்டா காதலனுடன் ஓட்டம் எடுத்த மனைவி!

 
சுமித்ரா

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகேயுள்ள திரிகூடபுரத்தைச் சேர்ந்த  ராமகிருஷ்ணன் என்பவரின் மகன் திருமலைகுமார். இவருக்கும் செங்கோட்டை பகுதியை சேர்ந்த ஜோதிமணி மகள் சுமித்ரா (30) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.  இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் 12ம் வகுப்பு வரை படித்த மனைவி சுமித்ரா, கல்லூரியில் படிக்க போவதாக கணவரிடம் கூறியுள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத கணவர், மனைவி சுமித்ராவை கல்லூரியில் சேர்த்தார். இதில் சில கடன் சுமை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கடனை அடைப்பதற்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் வெளியூர் வேலைக்கு சென்றார்.

அதன்பிறகு மனைவி சுமித்ரா குழந்தை மற்றும் மாமியாருடன் வசித்து வந்தார். அப்போது மாமியாருடன் வசித்து வந்த சுமித்ரா, இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் எப்போதும் மூழ்கி இருப்பார். இந்நிலையில் தான் இன்ஸ்டாகிராம் மூலம் மதுரையை சேர்ந்த 28 வயது வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து கணவர் வெளிநாடு சென்றிருந்த நிலையில், இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, இன்ஸ்டாகிராம் மூலம் அந்த வாலிபருடன் மிகவும் நெருக்கமாக பழகி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு செங்கோட்டையில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு செல்வதாக மாமியாரிடம் கூறிய சுமித்ரா, இரண்டு நாட்களாகியும் வீடு திரும்பவில்லை. இதை வெளிநாட்டில் உள்ள மகனுக்கு செல்போன் மூலம் மாமியார் தெரிவித்துள்ளார். வெளிநாட்டில் இருந்த கணவர், மனைவியின் செல்போன் எண்ணுக்கு அழைத்தபோது, ​​போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து மனைவி சுமித்ரா தனது கணவரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். இதை பார்த்த கணவர் அதிர்ச்சி அடைந்தார்.

அதில் மனைவி சுமித்ரா வேறு ஒரு பையனை திருமணம் செய்து கொள்ளும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதைப் பார்த்த கணவர், மனைவியின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது, ​​செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அதன்பின், மாமியாரின் செல்போன் எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.  அதில் மாமியார் பேசினார். தயவு செய்து இனிமேல் என் மகளை தொடர்பு கொள்ள வேண்டாம் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டதாக கூறி செல்போனை அணைத்து விட்டார். அதன்பிறகு தொடர்பு கொண்டபோது, ​​மாமியாரின் செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து வெளிநாட்டில் உள்ள கணவர் திருமலைகுமார்என்ன செய்வதென்று தெரியாமல் தனது தாயின் செல்போன் எண்ணுக்கு அழைத்து காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு கூறினார். அதன் அடிப்படையில் தாய் சொக்கம்பட்டி காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கச் சென்றபோது, ​​புகாரை வாங்காமல் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குச் செல்லுமாறு கூறி மூதாட்டியை போலீஸார் அனுப்பி வைத்தனர். இதனால் வெளிநாட்டில் இருக்கும் தாயும் மகனும் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.

மேலும், படிக்க வைக்க வாங்கிய கடனை அடைக்க வெளிநாடு சென்ற கணவரை நினைக்காமல் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான வாலிபரை திருமணம் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web