விவகாரத்து தர ரூ.1கோடி கேட்ட 2வது மனைவி.. கூலிப்படைக்கு ரூ.10 லட்சம் கொடுத்து கதையை முடித்த கணவன்!

 
பெண்

டெல்லி ரஜோரி கார்டன் பகுதியில் தொழிலதிபர் எஸ்.கே.குப்தா(71) குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகன் அமித்குப்தா(45) வாதநோயால் பாதிக்கப்பட்டவர். அதனால் அமித்குப்தாவை கவனித்துக் கொள்வதற்காக, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் எஸ்.கே.குப்தா 35 வயது பெண் ஒருவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். 

ஆனால், அந்த பெண், அமித்குப்தாவை சரியாக கவனிக்கவில்லை. மாறாக எஸ்.கே.குப்தா பணத்தின் மீது கவனமாக இருந்தார். உரிய முறையில் கவனிக்காத நிலையில் எஸ்.கே.குப்தா சோகமடைந்தார். மகனின் உடல்நிலை எண்ணி வருந்திய அவர், இதுகுறித்து இரண்டாவது மனைவியுடம் கேட்ட போது, அமித்குப்தாவை கவனிக்க முடியாது என்று கூறியுள்ளார். அத்துடன் உங்களுடன் வாழமுடியாது என்றும், விவகாரத்து செய்ய 1 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று அந்த பெண் குப்தாவிடம் கேட்டுள்ளார். 

பெண்

இதனை கேட்டு எஸ்.கே.குப்தா அதிர்ச்சி அடைந்தார். நம்பிக்கையுடன் திருமணம் செய்தநிலையில், அவர் இப்போது பணம் கேட்டு மிரட்டுகிறார் என கவலை அடைந்தார். இந்த விவகாரம் தொடர்பாக அவர்களுக்குள் நாளுக்கு நாள் பிரச்சினை தீவிரமானது. இதனால் ஆத்திரமடைந்த எஸ்.கே.குப்தா, கூலிப்படையைச் சேர்ந்த விபின் சேத்தி என்பவரை தொடர்புகொண்டார். அவரிடம் தனது இரண்டாவது மனைவியைக் கொலை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதன்படி அவரைக் கொலை செய்ய 10 லட்ச ரூபாய் பேசப்பட்டது. முன்பணமாக 2.40 லட்சத்தைப் பெற்றுக் கொண்ட விபின் சேத்தி, தனது கூட்டாளி ஹிமான்ஷுவுடன் குப்தாவின் வீட்டிற்கு நேற்று சென்றார். அப்போது அவர்கள் பேசி வைத்தபடி அமித் குப்தாவை அவரது தந்தை குப்தா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தார்.

இதனால் தனியாக இருந்த குப்தாவின் இரண்டாவது மனைவியை விபின் சேத்தி, ஹிமான்ஷு ஆகிய இருவரும் கத்தியால் சரமாரியாக குத்திக் கொலை செய்தனர். அத்துடன் வீட்டில் உள்ள பொருட்களைச் சூறையாடியதுடன் கொலை செய்யப்பட்ட பெண்ணின் செல்போன் உள்ளிட்ட பொருட்களைத் திருடிச்சென்றனர். இந்த கொலை கொள்ளைக்காக நடந்தது போன்ற தோற்றத்தை அவர்கள் உருவாக்கி விட்டுச் சென்றனர்.

பெண்

இதன்பின்னர் போலீசார் விசாரணை நடத்தினர். வீட்டில் ஆய்வுசெய்துவிட்டு கணவர் குப்தாவிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்தனர். அதனால், அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்த போது, தனது இரண்டாவது மனைவியை கூலிப்படையை ஏவி கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். 

இதையடுத்து குப்தா, அவரது மகன் அமித்குப்தா, கூலிப்படையைச் சேர்ந்த விபின் சேத்தி, ஹிமான்ஷு ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இரண்டாவது மனைவியை கூலிப்படையை ஏவி கணவர் கொலை செய்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

From around the web