கணவன் உடல் தகனம்... மயங்கி விழுந்து மனைவி உயிரிழப்பு!

 
கணவன் உடல் தகனம்... மயங்கி விழுந்து மனைவி உயிரிழப்பு!

இடுகாட்டில் கணவன் உடல் தகனம் செய்யப்பட்ட அதே நேரத்தில் வீட்டில் மனைவி மயங்கி விழுந்து உயிர் இழந்தது இறுதி சடங்கில் கலந்து கொள்ள வந்திருந்தவர்களை அடுத்த அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

ஒரே  நாளில் தாய், தந்தை அடுத்தடுத்து உயிர் இழக்க மூன்று குழந்தைகள் அனாதையாக தவித்து நின்றது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது,

தஞ்சை வடக்கு வாசல் சுண்ணாம்புக்கார தெருவில் வசித்து வந்தவர்கள் மெய்யழகன் என்கிற லெட்சுமணன், மல்லிகா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.

கணவன் உடல் தகனம்... மயங்கி விழுந்து மனைவி உயிரிழப்பு!

அதே பகுதியில் லெட்சுமணன் கட்டட வேலை பார்த்து வந்தார். அவ்வப்போது சைக்கிள் ஸ்டாண்டில் வேலைக்கு சென்று வந்துள்ளார். தற்போது பள்ளிகளுக்கு முழு ஆண்டு தேர்வு முடிந்து கோடை விடுமுறை என்பதால் மல்லிகா தனது 3 குழந்தைகளையும் அழைத்து கொண்டு சிவகங்கையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று உள்ளார்.

இந்நிலையில் சைக்கிள் ஸ்டாண்டில் வேலை முடித்து விட்டு இரவு வீட்டுக்கு வந்த லெட்சுமணன் விடிந்த பிறகும் எழுந்திருக்காததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்த போது மெய்யழகன் இறந்து கிடப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து சிவகங்கையில் இருந்த லெட்சுமணன் மனைவிக்கு தகவல் தெரிவித்தனர்.  
தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு பதறியடித்தப்படி வீட்டிற்கு வந்த மல்லிகா கணவர் உடலைப் பார்த்த அழாமல் வெறித்து பார்த்தபடி உட்கார்ந்து இருந்ததாக சொல்லப்படுகிறது. லெட்சுமணன் உடலுக்கு சடங்குகள் செய்யப்பட்டு உறவினர்கள் உடலை இடுகாட்டிற்கு எடுத்து சென்ற போது மல்லிகா மயங்கி விழுந்துள்ளார். 

இடுகாட்டில் லெட்சுமணன் உடலை தகனம் செய்து விட்டு உறவினர்கள் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது மல்லிகாவும் இறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர். ஒரே நாளில் தாய். தந்தையை பறிகொடுத்து விட்டு 3 குழந்தைகளும் அனாதைகளாக செய்வது அறியாது தவித்து நின்றது அனைவரது கண்களையும் குளமாக்கியது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web