நான் 10வது பெயிலானேன்... தற்கொலைக்கு முயன்ற மாணவனை உற்சாகப்படுத்திய கலெக்டர்... திருப்பூரில் நெகிழ்ச்சி!

 
கலெக்டர்

நான் 10ம் வகுப்பு பெயிலானவன் தான்.. இன்னைக்கு உன் முன்னாடி கலெக்டரா நின்னு பேசிக்கிட்டு இருக்கேனில்லையா? என்று 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்ததால், தற்கொலைக்கு முயன்ற மாணவனை நேரில் சந்தித்து உற்சாகப்படுத்தி இருக்கிறார் திருப்பூர் மாவட்ட ஆட்சியர். பள்ளி அளவிலேயே இப்படி மாணவ, மாணவிகளிடம் ஊக்கப்படுத்தும் விதமாக ஆசிரியர்கள் பேசி வந்திருந்தால், தேர்ச்சி சதவிகிதமும் அதிகரித்திருக்கும். பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளிடம் இப்படி உற்சாகப்படுத்த தவறி விடுகிறார்கள்.

திருப்பூர்

இந்நிலையில், நேற்று காலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் பல்லடம் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டிருந்தார். அப்போது, மருத்துவமனையின் முதலுதவி சிகிச்சை பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, சிறப்பு சிகிச்சை பகுதி ஆகிய இடங்களில் ஆய்வு செய்து  நோயாளிகளிடம் சிகிச்சை அளிக்கப்படும் விதம் குறித்து விசாரணை நடத்தினார்.  அவர்களின் உடல் நலம் குறித்தும் கேட்டறிந்தார்.  

இந்நிலையில், சிகிச்சைப் பிரிவில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததால் உயிரை மாய்த்துக் கொள்ள முயன்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பள்ளி மாணவனை எதிர்பாராத விதமாக சந்தித்த மாவட்ட கலெக்டர், அந்த மாணவனின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். அப்போது மாணவனை ஊக்கப்படுத்தும் வகையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் நான் தோல்வியடைந்தவன். பிறகு மீண்டும் தேர்வினை எழுதி படித்த நானே ஒரு மாவட்டத்தின் கலெக்டராக ஆகிட்டேன். அப்படி இருக்கும் போது உன்னால முடியாதா?

பொதுத் தேர்வு

இப்போது தான் நாம் இன்னும் தைரியமாக மேலே எழுந்து வர வேண்டும். தொடர்ந்து நன்றாக படி. ப்ளஸ் 2 பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண் எடு. நம்மால் முடியாதது என்று ஒன்றும் இல்லை. ப்ளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வந்ததும் எனக்கு மொபைலில் அழைத்து கண்டிப்பாக கூற வேண்டும் என மாணவனுக்கு தன்னுடைய மொபைல் எண்ணை அளித்து அறிவுரை வழங்கி உற்சாகப்படுத்தினார்.

மேலும்  நானும் வாலிபால் பிளேயர் தான். உனக்கு அதில் ஆர்வம் இருந்தால் நன்றாக விளையாடு. உன்னுடைய பள்ளி தலைமை ஆசிரியரிடம் பேசுகிறேன். எதை பற்றியும் கவலைப்படாதே. உறுதியோடு படி. தோல்வி தான் வெற்றிக்கான அடுத்தபடியாக இருக்கும் என்று மாணவனிடம் மனவலிமை ஏற்படுத்தும் வகையில் கலெக்டர் அறிவுரை வழங்கியது மாணவரின் பெற்றோருக்கும் அங்கிருந்தவர்களுக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web