24 மணி நேரமும் என்னை அணுகலாம்... மோடி உறுதி!

 
பிரதமர் மோடி
 24 மணி நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் என்னை அணுகலாம் என தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் மத்தியில் மோடி தெரிவித்துள்ளார்.  எந்தெந்த கட்சிக்கு எந்தெந்த துறைகள் என ஊடகங்களில் இருந்து பல கணிப்புகள் வெளியாகி வருகிறது, பிரேக்கிங் செய்திகளை நம்பி இந்த நாடு செயல்படாது என பேசியுள்ளார். 

 தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் மோடி உரையாற்றினார். இந்த உரையில் இந்த கூட்டணி இந்தியாவின் ஆசையை பிரதிபலிக்கும் வகையில் உருவாகியுள்ளது.  தேசிய ஜனநாயக கூட்டணி  தேர்தலுக்கு  முந்தைய  பிந்தைய கூட்டணி போல் எப்போதும் அமைந்தது இல்லை. இது இயற்கையாக அமைந்த கூட்டணி, வரலாற்று சிறப்பு மிக்க கூட்டணி எனக் கூறியுள்ளார்.எதிர்க்கட்சிகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை குறை கூறிய நிலையில்  இப்போது ஒருவரும் வாய் திறக்கவில்லை; ஜனநாயகத்தின் மாண்பைக் குறைக்கவே ஈவிஎம் பிரச்னையை எதிர்க்கட்சிகள் எழுப்பின. சர்வதேச அளவில் இந்தியாவின் பிம்பத்தை சீர்குலைக்க எதிர்க்கட்சிகள் முயற்சி செய்கின்றன. 

அண்ணாமலை மோடி
கடுமையாக உழைத்ததால்தான் தமிழகத்தில் பாஜகவின் வாக்கு சதவிகிதம் உயர்ந்துள்ளது; எதிர்காலத்திலும் தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும்; கடுமையான உழைப்பால் கேரளாவில் கால்பதித்துவிட்டோம். பூரி ஜெகந்நாதர் அருளால் அடுத்த 50 ஆண்டுகளுக்குள் ஒடிஷாவிலும் தாமரை மலரும்.  

சிறப்பு கட்டுரை | அது ஆச்சு 20 வருஷம்...தேசிய அரசியலில் மீண்டும் கிங் மேக்கராக விஸ்வரூபமெடுக்கும் சந்திரபாபு!
காங்கிரசை விட அதிகமான இடங்களை 3வது முறையாக பாஜக பெற்றுள்ளது; ஜெயித்தாலும், தோற்றாலும் பாஜக ஒரே மாதிரிதான் நடந்துகொள்ளும்; முற்றிலும் ஒருங்கிணைந்த கூட்டாட்சி என்பதே எங்கள் குறிக்கோள்; இந்தியா கூட்டணி இப்போதும் பிளவுபட்டதாக உள்ளது. எதிரணியில் இருந்து மக்களவைக்கு தேர்வாகியுள்ள எம்.பிக்களுக்கு வாழ்த்துகள் எனப் பேசியுள்ளார். மோடியை அடுத்து   பேசிய  தெலுங்கு தேச கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு , பாஜக தலைவர்களின் பரப்புரையால்தான் ஆந்திராவில் வெற்றி சாத்தியமானது; உலக அரங்கில் இந்தியாவின் புகழை நிலைநிறுத்தியது தான் மோடியின் மிகப்பெரிய சாதனை; சரியான நேரத்தில் மோடி என்ற சரியான தலைவரை இந்தியா பெற்றுள்ளது ஏழைகள் இல்லா இந்தியாவை உருவாக்க மோடியால்தான் முடியும்  எனப் பேசியுள்ளார்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web