தேர்தலில் படுதோல்வி... கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ரிஷி சுனக்!

 
ரிஷி சுனக்

கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த ரிஷி சுனக் கடந்த 2022ம் ஆண்டு முதல் பிரிட்டன் பிரதமராக பதவி வகித்து வருகிறார்.அவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரியில் முடிவடைகிறது. இருப்பினும், பிரிட்டிஷ் பாராளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக நேற்று பிரித்தானிய பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. 650 உறுப்பினர்களைக் கொண்ட பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த 8 பேர் போட்டியிட்டனர். இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது.

ரிஷி சுனக்

இதில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க தேவையான இடங்களை விட அதிக இடங்களை கைப்பற்றது. போட்டியிட்ட தேர்தலில் பிரதமர் ரிஷி சுனக் வெற்றி பெற்றாலும், அவரது கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளர்கள் பல இடங்களில் தோல்வியடைந்தனர். தேர்தல் தோல்வியால் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பதவியை ரிஷி சுனக் ராஜினாமா செய்தார். பிரிட்டன் பிரதமராக 20 மாதங்கள் பதவி வகித்த ரிஷி சுனக் தேர்தல் தோல்விக்கு மன்னிப்பு கேட்டார்.

தோல்விக்கு தானே பொறுப்பேற்பேன் என்றும் கூறினார். பின்னர் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். பிரதமராக அவர் ஆற்றிய கடைசி உரையில், "முதலில் நான் சொல்வேன், என்னை மன்னியுங்கள், நான் இந்த நிலையில் என்னால் முடிந்ததைச் செய்தேன், ஆனால் பிரிட்டனில் ஆட்சி மாற்றம் தேவை என்பதை நீங்கள் தெளிவுபடுத்தியுள்ளீர்கள்." “உங்கள் எதிர்வினைதான் முக்கியம். உங்கள் கோபத்தையும் ஏமாற்றத்தையும் கேட்டிருக்கிறேன்.இந்தத் தோல்விக்கு முழுப்பொறுப்பேற்கிறேன்.

ரிஷி சுனக்

இந்த முடிவைத் தொடர்ந்து கட்சித் தலைவர் பதவியில் இருந்தும் விலகுகிறேன். "எனது அரசியல் எதிரியாக இருந்தாலும், சர் கீர் ஸ்டார்மர் விரைவில் நமது பிரதமராக வருவார். இந்த பாத்திரத்தில் அவர் பெற்ற வெற்றிகள் எங்கள் வெற்றிகளாக இருக்கும். அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நான் நன்றி கூறுகிறேன்." அவர் மீது எனக்கு மரியாதை உண்டு'' என்றார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web