யெஸ்.. நான் இப்போ சிங்கிள்... மிங்கிள் ஆக காத்திருக்கேன்’ ப்ரேக்-அப் குறித்து நடிகை ஸ்ருதிஹாசன் பேச்சு!
“யெஸ்... நான் இப்போ சிங்கிளாக தான் இருக்கே. மிங்கிள் ஆக ரெடியாகவும் இருக்கேன். இப்போதைக்கு வேலையில் கவனம் செலுத்தி வருகிறேன்” என்று அதிரடி கிளப்பி தனது காதல் தோல்வி குறித்து ரசிகர்களிடம் மனம் திறந்து பேசியிருக்கிறார் நடிகை ஸ்ருதிஹாசன்.
பிரபல டாட்டூ ஆர்டிஸ்ட் சாந்தனுவைக் காதலித்து வந்தார் ஸ்ருதிஹாசன். இருவரும் மும்பையில் ஒரே வீட்டில் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தனர். ஆனால், திடீரென கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.

‘சிலரின் உண்மை முகங்கள் இப்போது தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது’ என நடிகை ஸ்ருதிஹாசன் மறைமுகமாக தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டு, இருவருக்கும் இடையேயான பிரேக்கப்பை உறுதி செய்தார். மேலும், சாந்தனுவுடனான புகைப்படங்களைத் தனது சமூகவலைதளப் பக்கத்தில் இருந்து நீக்கியவர் அவரை அன்ஃபாலோவும் செய்தார்.

இந்நிலையில், தனது சமூகவலைதளப் பக்கத்தில் நேற்று நேரலையில் வந்து ரசிகர்களிடையே பேசிய நடிகை ஸ்ருதிஹாசன், ரசிகர் ஒருவர் அவரின் ரிலேஷன்ஷிப் ஸ்டேட்ஸ் குறித்து கேள்வி எழுப்பியதற்கு, “இந்தக் கேள்விக்கு பதில் சொல்வது எனக்கு மகிழ்ச்சியான விஷயம் இல்லை. இருந்தாலும் இதை நான் தெளிவுப்படுத்த விரும்புகிறேன். நான் இப்போது சிங்கிள் தான். இன்னொருவருடன் மிங்கிள் ஆக தயாராக இருக்கிறேன். இப்போதைக்கு என் வேலையில் மட்டும் கவனம் செலுத்தி சந்தோஷமாக இருக்கிறேன்” என்று பேசினார்.
சாந்தனுவுக்கு முன்பாக லண்டனைச் சேர்ந்த மைக்கேல் என்பவரை ஸ்ருதி டேட் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
