நான் தான் சிஎம்.... வைரலாகும் நடிகர் பார்த்திபன் பதிவு!

 
பார்த்திபன்


தமிழ் திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்த நடிகர்களில் ஒருவர் நடிகர் பார்த்திபன். இவர் தான் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். தற்போது, தனுஷ் இயக்கி நடிக்கும் ''இட்லி கடை'' படத்தில்   ''அறிவு'' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் 1ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில்   பார்த்திபன் தனது புதிய படத்தை அறிவித்திருக்கிறார். 


இப்படத்திற்கு ''நான் தான் சிஎம்'' எனப்பெயரிடப்பட்டுள்ளார்.  இப்படத்தை அவரே எழுதி இயக்குகிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ''பெரியோர்களே, தாய்மார்களே, வாக்காளப் பெருமக்களே! ஜனநாயக உரிமை யார் வேண்டுமானாலும் தேர்தலில் நிற்கலாம். 

பார்த்திபன்

நானும் நிற்கிறேன் . என்னை உட்கார வைக்க வேண்டியது உங்கள் கடமை. நான் சிஎம் நாற்காலியில் அமர்ந்தப் பிறகு போடப் போகும் முதல் கையெழுத்து எனக்குப் பிறகு அந்த சீட்டில் யாருமே அமரக் கூடாது என்பது தான்! போடுங்கம்மா ஓட்டு 'படகு' சின்னத்தைப் பாத்து!சி.எம்.சிங்காரவேலன் எனும் நான்….'' பார்த்திபனின் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?