ரஷ்யா இறக்குமதி குறித்து எனக்கு தெரியாது... இந்தியாவின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பதில்!

 
ட்ரம்ப் மோடி

ரஷ்யாவிடம் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்வது குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். 

கச்சா எண்ணெய் மூலம் கிடைக்கும் பணத்தை உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா பயன்படுத்துவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார். மேலும், ரஷியா மீது பல்வேறு பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது.

ட்ரம்ப்

அதேபோல், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீதும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வரி விதித்துள்ளார். அந்த வகையில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிப்பதாக டிரம்ப் அறிவித்தார். மேலும், இந்த வரியை உயர்த்துவேன் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் இந்த அறிவிப்பிற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், ரஷ்யாவிடமிருந்து யுரேனியம், உரம், வேதிப்பொருட்களை அமெரிக்கா இறக்குமதி செய்வதாகவும், அமெரிக்கா இரட்டை நிலைப்பாட்டுடன் செயல்படுவதாகவும் இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது.

ட்ரம்ப்

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்திக்கையில், ரஷ்யாவில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்வது குறித்து டிரம்ப் இடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அந்த கேள்விக்கு பதில் அளித்த டிரம்ப், ரஷ்யாவில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்வது குறித்து எனக்கு தெரியாது. இது குறித்து நான் ஆய்வு செய்துவிட்டு உங்களிடம் முழு விவரத்தையும் தெரிவிக்கிறேன்

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?