ரூ10 டிப்ஸ் வேணாம்... தள்ளுவண்டி கடைக்காரரின் நேர்மையால் வியந்து போன வெளிநாட்டு சுற்றுலா பயணி!

 
 வெளிநாட்டு பயணி


 வெளிநாட்டு பயணி ஒருவர் சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இது குறித்த வீடியோவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிக்கு இந்தியாவில் நடந்த அனுபவம்   பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. சமீப காலமாக இந்தியாவை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் புகழும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.  

அந்த வகையில் கொல்கத்தாவில்  ஒரு தள்ளு வண்டி  கடைக்காரரிடம் வாழைப்பழ ஷேக் வாங்கி ஒரு சுற்றுலா பயணி குடிப்பதை காண முடிகிறது.  அந்த வெளிநாட்டு சுற்றுலா பயணி அதனை குடிக்கும் போது மிகவும் அற்புதமாக இருக்கிறது எனக் கூறுகிறார். 

 வெளிநாட்டு பயணி

பின்னர் அந்த வெளிநாட்டு சுற்றுலா பயணி பணம் எவ்வளவு என்று கேட்டதற்கு 20 ரூபாய் எனக் கூறுகிறார்  இருப்பினும் வெளிநாட்டு சுற்றுலா பயணி ரூ10 டிப்ஸ் சேர்ந்து  30 ரூபாய் கொடுக்கிறார். ஆனால் தள்ளுவண்டி கடைக்காரர் அந்த பத்து ரூபாயை டிப்ஸாக ஏற்க மறுத்ததோடு அதனை அவர் திரும்ப கொடுத்துவிட்டார். மேலும் அவரது நேர்மையை கண்டு வெளிநாடு சுற்றுலா பயணி   இந்த வீடியோவை அசந்து போய் பதிவிட்டுள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?