என் கஷ்டம் எதிரிக்கு கூட வரக்கூடாது... பிரபல வில்லன் நடிகர் புலம்பல்!
தமிழ் திரையுலகில் 90களில் முன்னணி வில்லன் நடிகராக இருந்தவர் பொன்னம்பலம். இவர், தற்போது மோசமான உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு சிறுநீரக செயலிழப்பு காரணமாக தொடர்ந்து டயாலிசிஸ் செய்யப்பட்டு வருகிறது.

இது குறித்து நடிகர் பொன்னம்பலம் “அதிகமாக மது அருந்தி என்னை நானே பாழாக்கிக் கொண்டேன். டயாலிசிஸ் செய்வது உலகிலேயே மிக மோசமான தண்டனை. என் எதிரிகளுக்குக்கூட இந்த கஷ்டம் வரக்கூடாது” என கண்கலங்கி கூறினார்.

கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 750-க்கும் மேற்பட்ட ஊசிகள் தனக்கு போடப்பட்டதாகவும் கூறியிருந்தார். நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தப் பிரச்சனைகளும் அவரது சிறுநீரக செயலிழப்புக்கு முக்கிய காரணமாக அமைந்ததாக தெரிகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
