கணவருடன் வாழ பிடிக்கவில்லை.. காதலனுடன் கிளம்பிய கர்ப்பிணி.. ஷாக்கில் கணவன்!

 
கள்ளக்காதல்

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் தாமரச்சேரியை சேர்ந்த 24 வயது பெண்ணுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 4 வயதில் குழந்தை உள்ளது. மேலும், அந்த பெண் தற்போது இரண்டு மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில், இன்ஸ்டாகிராம் மூலம் வடகரையைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பெண்ணுக்கு தொடர்பு ஏற்பட்டது.  

கர்ப்பிணி

இந்நிலையில் கடந்த 10ம் தேதி மாலை காருடன் வந்த வாலிபர் கர்ப்பிணியை அழைத்து சென்றார். இருவரும் வெளிநாடு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.இந்நிலையில் கடந்த 10ம் தேதி முதல் மனைவியை காணவில்லை என அவரது கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், தனது மனைவி வீட்டின் அருகே காரில் ஏறியதாகவும், அதன் பிறகு வீடு திரும்பவில்லை என்றும் கூறியிருந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, வடகரையைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் கர்ப்பிணி பெண் ஒருவர் காவல் நிலையத்தில் ஆஜரானார். இதையடுத்து அவரது கணவர் மற்றும் உறவினர்கள் காவல் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டனர். காதலனுடன் செல்வதாகவும், கணவருடன் வாழ பிடிக்கவில்லை என்றும் அவரது மனைவி கூறியுள்ளார்.

காதல்

பின்னர் அந்த பெண் தனது காதலருடன்  மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணைக்கு பின் இருவரும் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் கோழிக்கோடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web