அந்த நோயால் தான் உடல் எடை மெலிந்தேன்!! ரோபோ சங்கர் நெகிழ்ச்சி!!

 
ரோபோ சங்கர்

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மக்களிடையே பிரபலமானவர் நடிகர் ரோபோ சங்கர்.இவர் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று அங்கும் தனி முத்திரை பதித்தவர்.  கோலிவுட்டில் காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் ரோபோ சங்கர். அஜித், தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார். கடந்த சில மாதங்களாகவே  உடல் எடை வெகுவாக குறைந்து மிகவும் மெலிந்த தோற்றத்துக்கு மாறினார்.இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி  பேசுபொருளாகியுள்ளது. அத்துடன்  ரசிகர்கள், அவருக்கு என்ன ஆச்சு என கேள்வி எழுப்பி வருகின்றனர். பல வதந்திகளும், சர்ச்சை பேச்சுக்களும் கிளம்பியுள்ளன.

ரோபோ சங்கர்

இந்நிலையில், தன்னுடைய உடல்நிலை குறித்தும், தான் திடீரென மெலிந்து போனது ஏன் என்பது குறித்தும் நடிகர் ரோபோ சங்கர் சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசி உள்ளார். இது குறித்து  “உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக டயட்டில் இருந்த போது எனக்கு மஞ்சள் காமாலை நோய் வந்துச்சு. அந்த நோய் வந்ததன் காரணமாக தான் உடல் எடை வேகமாக குறைந்துவிட்டது. நல்ல நேரமாக எனக்கு நல்ல மருத்துவர்கள் அமஞ்சாங்க. என்னை நன்றாக பார்த்துக்கிட்டாங்க. என் மனைவி, என் குழந்தைகள் மற்றும் என்னுடைய நண்பர்கள் எல்லாருமே நல்லபடியா பார்த்துக்கிட்டாங்க. இதனால் விரைவாக குணமடைந்து விட்டேன்.  

ரோபோ சங்கர்

சினிமாவிலோ சின்னத்திரையிலோ 4 மாதங்களாக நடிக்கவில்லை. வீட்டிலிருந்தபடியே  நகைச்சுவை நிகழ்ச்சிகளை பார்த்ததால் தான் சீக்கிரம் குணமடைய முடிந்தது. எத்தனையோ பேரை சிரிக்க வைத்து மனக்கஷ்டத்தை போக்கி இருக்கிறேன். அந்த வகையில்  என்னுடைய கஷ்டத்தை போக்கியது காமெடி ஷோக்கள் தான். அதிலும் ராமர் காமெடியை அடிச்சுக்கவே முடியாது.  எனக்கு காமெடி பண்ண மட்டுமல்ல, யார் காமெடி பண்ணாலும் அதை ரசிக்கவும் தெரியும்.   என்னுடைய உடல்நிலை குறித்து யூடியூப்ல தப்பு தப்பா போட்டாங்க, அதையெல்லாம் பார்த்து நான் சிரிச்சிட்டு தான் இருந்தேன். தற்போது வெளியே செல்லும் போதெல்லாம் என்னை பார்ப்பவர்கள், நீங்க பழையபடி வரணும்ணு  பிரார்த்தனை பண்ணினதாகசொல்கிறார்கள். இந்த மாதிரி உண்மையான அன்பு ரசிகர்களை பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.  

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web