‘அப்பா இறந்ததே இன்று தான் தெரியும்’ பிரபல தமிழ்பட நடிகை உருக்கம்!

 
‘அப்பா இறந்ததே இன்று தான் தெரியும்’ பிரபல தமிழ்பட நடிகை உருக்கம்!

தனது தந்தை உயிரிழந்து ஒரு வாரம் ஆன நிலையில், அவர் இறந்த விஷயமே தனக்கு இன்று தான் தெரியும் என்று நடிகை ஷெரின் உருக்கமானப் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். இதைப் பார்த்தப் பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். 

‘விசில்’ படத்தில் அழகிய அசுராவாக அசரடித்த நடிகை ஷெரின், அதன் பின்னர் ஒருசில படங்களில் நடித்திருந்தாலும் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினைகளால் அதன் பின்னர் தமிழ் சினிமாவில் இருந்து விலகியே இருந்தார். 

பிக் பாஸ் தமிழின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு கம்பேக் கொடுத்த நடிகை ஷெரின் மீண்டும் ரசிகர்களிடையே பிரபலமடைந்தார். பின்பு, விஜய் டிவியின் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு அசத்தினார். ஃபேஷன், இன்ஃபுளூயன்சர், மாடலிங் என பிஸியாக வலம் வருபவர் வாழ்வில் மீண்டும் சோகம் ஏற்பட்டிருக்கிறது. 

நடிகை ஷெரினின் அவர் தந்தைப் புகைப்படத்தைப் பகிர்ந்து அவரது மறைவு குறித்து உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். அதில், ‘அப்பா, உன்னை நான் அதிகம் நேசித்தேன். உன் அன்பிற்காக வாழ்நாள் முழுவதும் ஏங்கினேன். நீ மறைந்து ஒருவாரம் ஆகிவிட்டது. ஆனால், எனக்கு இன்று தான் தகவல் கிடைத்தது. 

செய்தியைக் கேள்விப்பட்டு என் இதயம் சுக்குநூறாக உடைந்து விட்டது. உன்னுடைய இந்தப் படம் தான் என்னிடம் இருக்கிறது. இதை என் வாழ்நாள் முழுவதும் என்னுடன் பத்திரமாக வைத்திருப்பேன். உங்களை மிஸ் செய்வேன். ரெஸ்ட் இன் பீஸ்!’ எனக் பதிவிட்டுள்ளார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web