முதல்வர் பூரண உடல்நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் - தமிழிசை சௌந்தரராஜன்
இன்று காலை லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டதை அடுத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

இது தொடர்பாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்டபோது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தலைச்சுற்றல் ஏற்பட்டதற்கானக் காரணத்தைக் கண்டறிவதற்குத் தேவையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் தமிழிசை சௌந்தரராஜன் தனது எக்ஸ் தளப்பக்கத்தில், " தமிழக முதலமைச்சர் அண்ணன் ஸ்டாலின் அவர்கள் தலை சுற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டு வருத்தமடைந்தேன்.
அவர் பூரண உடல்நலம் பெற வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்று பதிவிட்டிருக்கிறார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
