‘அழகான குழந்தை வேணும்’ கணவனின் தம்பியுடன் ஓடிய மனைவி!

 
திருமணம்
மத்தியப் பிரதேச மாநிலம், சத்தர்பூரில் தனக்கு அழகான குழந்தை வேண்டும் என்ற ஆசையில் தனது கணவரின் தம்பியுடன் வீட்டை விட்டு தப்பியோடிய மனைவி, அதன் பின்னர் தனக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு தனது கணவர் மற்றும் மாமியார் தான் பொறுப்பாவார்கள் என்று அவர்களுக்கு செல்போனில் மிரட்டல் செய்திகளை அனுப்பத் தொடங்கிய விநோதமான சம்பவம் பதிவாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனது கணவர் அத்தனை அழகாக இல்லாத நிலையிலும், கணவரை விட அவரது தம்பி அழகாகவும், நல்ல நிறத்துடனும் இருந்ததால் திருமணம் ஆன நாள் முதலே கணவருடன் குழந்தைப் பெற்றுக் கொள்ள அவர் விரும்பாமல் இருந்து வந்துள்ளார். 

5வது திருமணம்

இந்நிலையில், தனது மைத்துனரின் அழகால் அவர் ஈர்க்கப்பட்டதால் வீட்டை விட்டு தனது மைத்துனருடன் வெளியேறுவதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு இருவரும் வீட்டில் இருந்து தப்பியோடியுள்ளனர்.

தப்பியோடிய பின்னர், அவர் தனது கணவர் மற்றும் மாமியார்களுக்கும், தன்னைத் தேட முயற்சித்தால் 'தற்கொலை செய்து கொள்வேன். அதற்கு நீங்கள் இருவரும் தான் பொறுப்பாவீர்கள்' என்று மிரட்டல் செய்திகளை தொடர்ந்து செல்போனில் அனுப்பத் தொடங்கினார்.

திருமணம் கல்யாணம் கும்பம்

தம்பியுடன் வீட்டைவிட்டு மனைவி தப்பியோடிய நிலையில், இது குறித்து அவரது கணவர் சத்தர்பூர் எஸ்பியிடம் தனது மனைவிக்கு எதிராக புகார் அளித்ததை அடுத்து இந்த விஷயம் வெளியில் வந்துள்ளது. 

தங்களுக்குத் திருமணமாகி 1 வருடம் ஆகிறது என்றும், தனது கணவரிடம் அவர் அழகாக இல்லாததால் குழந்தை வேண்டாம் என்று மனைவி கூறிவந்ததாகவும் புகாரில் கூறி இருக்கிறார். இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!