உன் மூலமா குழந்தை பெத்துக்கணும்... அடம் பிடித்த கள்ளக்காதலி... கழுத்தை அறுத்து கொன்ற காதலன்!

 
தேவிகா

எனக்கு குழந்தை வேண்டும் என்று அடம்பிடித்த கள்ளக்காதலியைக் கழுத்தை அறுத்துக் கொலைச் செய்து, ரத்தம் சொட்ட சொட்ட கத்தியுடன் காவல் நிலையத்தில் சரணடைந்த இளைஞரால் கேரளாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நான் குழந்தை பெத்துக்கறதுல உனக்கு விருப்பமில்லைன்னா உன்னுடைய குழந்தையையாவது எனக்கு கொடுத்துடு என்று  தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளார் தேவிகா. 

கேரள மாநிலம், உடுமாபாரா கிராமத்தைச் சேர்ந்த தேவிகா(34) அதே பகுதியில் ப்யூட்டிஷியனாக வேலைப் பார்த்து வந்துள்ளார். தேவிகாவுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.   இந்நிலையில் சதீஷ் என்பவருடன் தேவிகாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.  இருக்கிறது. சதீஷ்க்கும் திருமணமாகி ஒரு குழந்தை  இருக்கிறது.  

கொரோனா காலக்கட்டத்தில் குழந்தை பிறப்பு சரிவு..!

சதீஷுக்கும் தேவிகாவுக்கும் இடையேயான பழக்கம், நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. கடந்த 9 வருடங்களாக இவர்கல் இருவரும் தங்களது துணைவர்களுக்குத் தெரியாமல் தினமும் தனிமையில் சந்தித்து, தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர்.  

இந்நிலையில் சதீஷின் குழந்தையைப் பார்த்த தேவிகா, அதே போன்று தனக்கும் குழந்தை வேண்டுமென ஆசைப்பட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து சதீஷ் மூலமாக தான் குழந்தைப் பெற்றுக் கொள்ள விரும்பி, தனது கணவரைத் தான் சமாளித்துக் கொள்கிறேன் என்று தனது ஆசையைக் கூறியிருக்கிறார்.

தனது வீட்டில் இதனால் பிற்காலத்தில் பிரச்சனைகள் எழும் என குழந்தை விஷயத்தில் சதீஷ் தொடர்ந்து மறுத்து வந்த நிலையில், ஒரு கட்டத்தில், சரி... உன்னுடைய குழந்தையை எனக்கு கொடு என்று கேட்டு அதிர வைத்திருக்கிறார். 

sa

எவ்வளவோ சொல்லியும்  தேவிகா, குழந்தை விஷயத்தில் சமாதானம் ஆகாத நிலையில், தனியார் விடுதியில் இருவரும் சந்தித்த போது, மீண்டும் உன் மூலமாக எனக்கு குழந்தை வேண்டும் என்று அடம்பிடித்துள்ளார் தேவிகா . இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது . 

இந்நிலையில், ஆத்திரமடைந்த சதீஷ் கத்தியை எடுத்து தேவிகாவின் கழுத்தை அறுத்து கொலைச் செய்து விட்டு, ரத்தம் சொட்ட சொட்ட அதே கத்தியுடன் சென்று காவல் நிலையத்தில் விபரத்தைச் சொல்லி சரணடைந்திருக்கிறார். சதீஷ் மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web