கோர விபத்தில் சிக்கி கோமாவில் இருந்தேன்.. பிரபல சீரியல் நடிகை ஓபன் டாக்!

 
ராகிணி 

தமிழும் சரஸ்வதியும் விஜய் டிவியில் சமீபத்தில் நடந்து முடிந்த சீரியல். இந்த சீரியலில் ராகிணி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அஸ்ரிதா. அம்மா அப்பா என்ற சீரியலில் தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கிய இவர், கான காணும் காலங்கள், தேன்மொழி பி.ஏ., நாம் இருவர் நமக்கு இருவர், தமிழும் சரஸ்வதியும் போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார்.

சீரியல் தவிர, தெகிடி, சில நிமிடங்களில், என்னை அறிந்தால் உள்ளிட்ட படங்களிலும் சிறு வேடங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் ஒரு பேட்டியில், தான் வாழ்க்கையில் சந்தித்த பெரிய பிரச்சனை பற்றி மனம் திறந்து பேசினார்.  அதாவது, 23 வயதில் நடந்த விபத்தில், மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டு, பழைய நினைவுகள் அனைத்தும் மறந்துள்ளார்.

மீண்டும் பழைய நிலைக்கு வர, 10 சதவீதம் மட்டுமே வாய்ப்பு உள்ளது என, டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அவளது தந்தை மற்றும் மன தைரியம் காரணமாக, ஒரு மாதத்திற்குள் எழுந்து கேமரா முன் நின்று தனது பயணத்தை தொடங்கியதாக கூறினார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web