விளையாடி கொண்டிருந்த போது சோகம்.. மின்சாரம் தாக்கி சிறுவன் பலி!

 
பெரிய கருப்பு

மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள முசுண்டகிரி பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தவமணி, கவிதா தம்பதி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் மூன்றாவதாக மகன் பெரிய கருப்பு (வயது 13) உள்ளனர். தற்போது கோடை விடுமுறை என்பதால் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று பெய்த கனமழையால், மின்கம்பத்தில் இருந்து, ஊராட்சி மின்மோட்டார் அறைக்கு, மின் ஒயர் செல்வதற்காக, பொருத்தப்பட்டிருந்த வயரில், எதிர்பாராதவிதமாக, மின் கசிவு ஏற்பட்டது.

இதை அறியாத சிறுவன் பெரிய கருப்பு விளையாடிக் கொண்டிருந்த போது தவறுதலாக கம்பியை தொட்டதில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். சுருண்டு விழுந்த சிறுவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மருத்துவமனையில் சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதைக் கேட்டு பெற்றோர்கள் கதறி அழுதனர்.

இதையடுத்து சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டின் அருகே விளையாடச் சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web