வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது விபரீதம்.. தீ விபத்தில் சிக்கி 4 பேர் பரிதாப பலி!

 
பினிஷ்குரியன்

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி அருகே உள்ள அங்காடிக்கடவு பகுதியை சேர்ந்தவர் பினிஷ்குரியன் (வயது 45). இயற்கை மசாலா வியாபரம் செய்து வருகிறார். இவர் தனது மனைவி அனுமோல் (40), மகள் ஜோனா (8), மகன் ஜெஸ்வின் (5) ஆகியோருடன் வீட்டில் 2வது மாடியில் வசித்து வந்தார். வீட்டின் அருகே தனது வர்த்தக நிறுவன  குடோனை வைத்து நடத்தி வந்தார்.

நேற்றிரவு பினிஷ்சூரியன் தனது குடும்பத்தினருடன் அறையில் தூங்கினார். இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் இவரது வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அங்கமாலி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மீட்பு குழுவினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

கொலை

ஆனால் அதற்குள் பினிஷ்குரியன், அவரது மனைவி அனுமோல் மற்றும் 2 குழந்தைகள் உடல் கருகி இறந்தனர். தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விட்டில் தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web