'நான் எப்போதும் உன்னுடன் இருப்பேன்; தைரியமாக இரு’ டிடிஎஃப் வாசனுக்கு பிரபல நடிகை ஆதரவு!

 
'நான் எப்போதும் உன்னுடன் இருப்பேன்; தைரியமாக இரு’ டிடிஎஃப் வாசனுக்கு பிரபல நடிகை ஆதரவு!

‘நான் எப்போதும் உன்னுடன் இருப்பேன்.. தைரியமாக இரு’ என்று டிடிஎஃப் வாசனுக்கு பிரபல நடிகையும், காதலியுமான ஷாலின்  தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். 

மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு காரில் சென்றுக் கொண்டிருந்த போது செல்போனில் பேசியப்படி காரை ஓட்டிச் சென்றதாகவும், பழகுநர் ஓட்டுநர் உரிமத்துடன் சென்றவர்  அதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதாகவும் மதுரை போலீசாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.  அவர் மீது 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், நடிகை ஷாலின் சோயா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலமாக டிடிஎஃப் வாசனுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். 
அதில், 'எனக்கு மிகவும் பிடித்த பையன்... தைரியமாக இரு! நான் எப்போதும் உன்னுடன் இருப்பேன். எனக்குத் தெரிந்த மிக அன்பான நபர் நீங்கள் தான். நீங்க எப்பவும் சொல்ற மாதிரி நடப்பதெல்லாம் நன்மைக்கு! விடு பாத்துக்லாம்' என்று நடிகை ஷாலின் பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில் தான் ஷாலினை காதலிப்பதாக டிடிஎஃப் வாசன் தெரிவித்திருந்தார். அவர்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களும் வைரலானது குறிப்பிடத்தக்கது.

 

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web