இந்தியரை தான் கல்யாணம் பண்ணிப்பேன்... அமெரிக்க பெண் கையில் பதாகையுடன் நூதனப் போராட்டம்...!
அமெரிக்காவில் நியூயார்க் மாகாணத்தில் புகழ்பெற்ற டைம்ஸ் ஸ்கொயர் பகுதி செயல்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் “இந்திய கணவர் தேவை” என எழுதிய பிளே கார்டுடன் நின்ற ஒரு இளம்பெண் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அந்த பெண்ணின் வினோதமான இந்த செயல், அந்த பகுதியில் நடமாடி கொண்டிருந்த பொதுமக்கள் அனைவரையும் மிகுந்த ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. வெறும் சில நொடிகளில் அங்கிருந்த பார்வையாளர்கள் அனைவரும் அவரைப் பார்த்து ரசிக்க ஆரம்பித்துள்ளனர்.
“உண்மையான காதல் எங்கு கிடைக்கும் என்பது யாருக்கும் தெரியாத புதிர்தான்” என்ற நிலையை பிரதிபலிக்கும் வகையில் நேரடியாக பிளே கார்டுடன் நின்றது பலரையும் சிரிக்கவைக்கும் வகையில் அமைந்தது. இந்நிலையில், அவரது பிளே கார்டை பார்த்ததும் அங்கு இருந்த ஸ்பைடர்மேன் வேடம் அணிந்த ஒருவர் அருகில் வந்து நின்றது மேலும் பார்வையாளர்களை கவர்ந்தது.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. இதன் மூலம், அந்த பெண் யார்? ஏன் இந்திய கணவரைதான் விரும்புகிறார்? என்பது குறித்து விவாதங்கள் வலுப்பெற்றுள்ளன. இதுவரை அந்த பெண்ணின் பெயர் அல்லது பின்னணி தெரியவில்லை என்றாலும், இந்திய கலாசாரம், குடும்பப் பாரம்பரியம் ஆகியவற்றை மதிக்கும் மனப்பான்மை இவைகளின் காரணமாக இந்த தேர்வை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இதற்கு நெட்டிசன்கள் பலரும் “இந்திய காதல் கதைகளுக்கு காரணம் ஷாருக்கான் திரைப்படங்கள்தான்” எனக் கிண்டல் செய்துள்ளார்.
மேலும் சிலர் “இந்திய ஆண்கள் நல்ல டீயும், நல்ல உறவுகளும் கொடுப்பவர்கள்” என புகழ்ந்துள்ளார். மற்றும் சில பேர் இந்திய சினிமா, கிரிக்கெட் மற்றும் உணவுகள் அந்த பெண்ணை ஈர்த்திருக்கலாம் எனக் கூறப்படுகின்றது. சிலர், “அனைத்து கணவர்களும் திருமணத்துக்குப் பிறகு ஒரே மாதிரியாகிவிடுவார்கள்” என பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
