ஒரு மாசத்தில திருப்பி தந்திடறேன்... திருடன் நெகிழ்ச்சி கடிதம்!

 
திருடன்

 
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர்  மெய்ஞ்ஞானபுரம் பகுதியில் வசித்து வருபவர்  சித்திரை செல்வின். இவர் ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.  இவரது மனைவியும் ஆசிரியராக பணிபுரிந்தவர் தான். இவர்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன். அனைவருக்கும் திருமணமாகி வெளியூரில் உள்ளனர். சென்னையில் பிரபல  வங்கியில் ஒரு மகன் பணியாற்றி வருகிறார். இதில் மருமகளுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்ததால்   குழந்தையை பார்ப்பதற்காக ஜூன் 17ம் தேதி சித்திரை செல்வின் மனைவியுடன் சென்னை சென்றிருந்தார்.  ஊரில் இல்லாத நாட்களில் வீட்டை பராமரிப்பதற்காக அதே பகுதியைச் சேர்ந்த செல்வி என்ற பெண்ணிடம் வீட்டு சாவியை கொடுத்திருந்தார்.

திருட்டு நகைகள் கொள்ளை

 அந்த பெண் வழக்கம் போல் வீட்டைப் பெருக்கி சுத்தம் செய்ய வந்தார். அப்போது  வீட்டின் கதவுகள் உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து உடனடியாக  சித்திரை செல்வினுக்கும் போலீசாருக்கும்  தகவல் தெரிவித்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார்  சித்திரை செல்வினை தொடர்புகொண்டு பீரோவில்  வைத்திருந்த பொருட்கள் மற்றும் பண விபரங்களை கேட்டனர்.

போலீஸ்

பீரோவில் ரொக்கப்பணம் ரூ60000  ஒன்றரை பவுன்  கம்மல், ஒரு ஜோடி வெள்ளி கொலுசு ஆகியவை இருந்ததாக கூறியுள்ளார்.  அதைத் தொடர்ந்து வீட்டில் போலீசார் சோதனையிட்டதில் திருடன் பேனாவால் ஒரு உருக்கமான கடிதம் எழுதி வைத்திருந்தான். அதில்  “என்னை மன்னித்து விடுங்கள். நான் இன்னும் ஒரு மாத்தில் திருப்பி தந்து விடுகிறேன். என் மனைவிக்கு உடம்பு சரியில்லை அதனால் தான்” எனக் குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து  போலீசார் வழக்கு பதிவு செய்து திருடனை  தேடி வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web