இல. கணேசனுக்கு விரைவில் நலம் பெற வேண்டும்... முக ஸ்டாலின் பதிவு!

நாகலாந்து மாநில ஆளுநா் இல.கணேசன் அரசு அலுவல்களுக்காக சென்னையில் உள்ள தனது இல்லத்துக்கு வந்து செல்வது வழக்கம். அதன்படி, சென்னை இல்லத்தில் தங்கியிருந்த அவா் வெள்ளிக்கிழமை காலை வீட்டுக்குள்ளேயே தவறி கீழே விழுந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன இதனால் அவருக்கு தலையில் அடிபட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சென்னை, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.

அவருக்கு நரம்பியல், இதயவியல் உள்பட பல்நோக்கு மருத்துவக் குழுவினா் தொடா் சிகிச்சை அளித்து வருகின்றனா். அவர் விரைவில் உடல்நலம் பெற முதல்வா் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் "நாகாலாந்து மாநில ஆளுநா் இல. கணேசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தியறிந்து மிகுந்த கவலை கொள்கிறேன். அவா் விரைவில் நலம்பெற்று, மீண்டும் நல்ல உடல்நிலைக்கு திரும்ப வேண்டும் என்று விழைகிறேன்” என தெரிவித்துள்ளாா்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
