ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் பாகிஸ்தான் முதலிடம்!!

 
பாகிஸ்தான்

இந்தியாவில் இன்னும் இரண்டு மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பபை கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. இதற்கு அனைத்து அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் தான், பாகிஸ்தான் அணி புதிய சாதனையை படைத்து மற்ற அணி வீரர்களுக்கு சவால் விடுத்துள்ளனர்.

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி அங்கு நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற நான்காவது போட்டியிலும் நியூசிலாந்து தோல்வியை தழுவியது. இதனால் 5 போட்டிகள் கொண்ட தொடரை 4-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி வென்றது. இவ்விரு அணிகள் இடையிலான 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கராச்சியில் நாளை நடைபெறுகிறது. 

பாகிஸ்தான்

இந்த வெற்றியின் மூலம் தற்போது ஐசிசி ஒருநாள் அணிகளின் தரவரிசையில் பாகிஸ்தான் முதல் இடத்துக்கு முன்னேறி அசத்தி உள்ளது. ஐசிசி ஒருநாள் அணிகளின் தரவரிசையில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய அணிகள் 113 புள்ளிகளுடன் முதல் 3 இடங்களில் உள்ளன. இங்கிலாந்து அணி 111 புள்ளிகளுடன் 4ம் இடத்திலும், நியூசிலாந்து 107 புள்ளிகளுடன் 5ம் இடத்திலும் உள்ளன.

பாகிஸ்தான்

 6 முதல் 10 இடங்களில் முறையே தென் ஆப்பிரிக்கா (101 புள்ளி), வங்கதேசம் (95 புள்ளி), இலங்கை (86 புள்ளி), வெஸ்ட் இண்டீஸ் (72 புள்ளி), ஆப்கானிஸ்தான் (71 புள்ளி) ஆகிய அணிகள் உள்ளன. பாகிஸ்தான் அணி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்துக்கு செல்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web