இனி ஆம்புலன்ஸ் வந்தால் டிரைவரே அதில் நோயாளியா போக வேண்டியிருக்கும்.... எடப்பாடி மிரட்டல்!

 
எடப்பாடி


தமிழத்தில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றன. அந்த வகையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையாற்றினார். 
 


அந்த கூட்டத்தில் எடப்பாடி  “இனி கூட்டத்திற்குள் ஆம்புலன்ஸ் வந்தால், அதை ஓட்டிட்டு வர்ற ட்ரைவரே அதில் பேஷண்டாக போகிற நிலைமை வரும்” என எச்சரிக்கை  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த உரையை ஆம்புலன்ஸ் ஓட்டுநரை நோக்கி அவர் கூறியதாக வீடியோ காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.


இந்தக் கருத்து பொதுமக்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. சுகாதாரத் துறையுடன் தொடர்புடையவர்களை மிரட்டுவது சர்ச்சைக்குரியதாகவும், அரசியல் மரியாதைக்கே தகாததாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. வேலூர் மாவட்டத்தில்  நடைபெற்ற இந்த கூட்டத்தில் பெரும்பான்மை மக்கள் கலந்து கொண்ட  நிலையில், எடப்பாடி பழனிசாமியின் கடுமையான வார்த்தைகள் அரசியல் வட்டாரத்தில் சூடான விவாதமாக மாறியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?