இனி பாகிஸ்தானை தாக்கினால் சவுதி அரேபியா தாக்குதல் நடத்தும்... ஒப்பந்தம் கையெழுத்தானது !
பாகிஸ்தான், சவூதி அரேபியா இடையே ஒரு முக்கியமான பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, இரு நாடுகளில் ஒன்று தாக்கப்படும் பட்சத்தில், அது மற்ற நாட்டின் மீதான தாக்குதலாக கருதப்படும் எனக் கூறப்படுகிறது. அதனால் இந்த ஒப்பந்தம் சர்வதேச அளவில் கவனத்தை பெற்றுள்ளது.
இந்த ஒப்பந்தம் நேட்டோ போன்ற பாதுகாப்பு உடன்பாடுகளுக்கு இணையாக இருப்பதாகவும், இந்த உடன்பாட்டின் முக்கிய அம்சம், ஒரு நாட்டின் மீதான தாக்குதல் இரு நாடுகளின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதை வரையறுப்பதாகும்.

இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு உறவை மேலும் பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின்படி இனிமேல் பாகிஸ்தானை இந்தியா தாக்கினால், சவுதி அரேபியா இந்தியாவை தாக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
