ஸ்டாலின் ராஜினாமா செய்தால் கள்ளச்சாராயம் ஒழிந்து விடுமா? திருமா ஆவேசம்!

 
பாஜகவிற்கு தோல்வி பயம்! தொல்.திருமா அனல் பறக்கும் குற்றச்சாட்டு!


கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி 58 பேர் பலியாகியுள்ளனர். எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து அதிமுக தமிழகம் முழுவதும் போராட்டம் தொடங்கியுள்ளது. அதே நேரத்தில்  அதிமுக உட்பட  எதிர்க்கட்சிகள் சிபிஐ விசாரணை கோருகின்றன. இது மலிவான அரசியல் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர், தொல். திருமாவளவன் எம்.பி் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மருத்துவமனை
இது குறித்து திருமாவளவன், “மு.க.ஸ்டாலின் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றிவிட்டால் மட்டுமே கள்ளச்சாராயம் ஒழிந்து விடுமா? கொள்கை முடிவு எடுத்து, மத்திய, மாநில அரசுகள் மதுவை தடை செய்ய வேண்டும், கள்ளச்சாராய விவகாரத்தில் அதிமுக உட்பட  எதிர்க்கட்சிகள் சிபிஐ விசாரணை கோருவது மலிவான அரசியல், தரம் தாழ்ந்த அரசியல். சிந்தாந்த ரீதியாக எந்த சமரசத்தையும் விசிக இதுவரை செய்துகொண்டதில்லை, இனியும் செய்யாது” என தெரிவித்துள்ளார்.    

ஸ்டாலின்
கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் இதுவரை 58 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் விஷச்சாராய விற்பனையை கட்டுப்படுத்த சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாவட்ட காவல் துறை  பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!