சுர்ஜித்தின் தாயையும் கைது செய்தால் தான் உடலை பெற்றுக் கொள்வோம்.... ஆணவக் கொலை செய்யப்பட்ட கவின் தந்தை உறுதி!

 
சுர்ஜித்
 

சுர்ஜித்தின் தாயையும் கைது செய்தால் தான்   உடலை பெற்றுக் கொள்வோம்.... ஆணவக் கொலை செய்யப்பட்ட கவின் தந்தை உறுதி!  
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் வசித்து வந்த ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ் . இவர்  ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் சுர்ஜித் தந்தை  உதவி ஆய்வாளர் சரவணனுக்கு ஆகஸ்ட் 8, 2025 வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.  

தமிழகம் முழுவதும் இந்த கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.  கவினின் உறவினர்கள் இன்னும் அவருடைய உடலை பெற்றுக்கொள்ளாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.   4-வது நாளாக கவினின் உறவினர்கள், தலித் உரிமை அமைப்புகள், மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய சந்திரசேகர், “சுர்ஜித்தின் தாய் கிருஷ்ணவேணியை கைது செய்யாவிட்டால், கவினின் உடலை பெற்றுக்கொள்ள மாட்டோம்,” எனக் கூறியுள்ளனர்.  


இது குறித்து அவர்  ” என்னுடய மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் சுர்ஜித் தந்தை மட்டும் தான் கைதாகி இருக்கிறார். இன்னும் அவருடைய மனைவி வேணி கைது செய்யப்படவில்லை. அவரையும் கைது செய்யுங்கள் நான் சட்டப்படி என்னுடைய மகனின் உடலை பெற்றுக் கொள்கிறேன். அப்படி கைது செய்யவில்லை எனில்  நான் நிச்சயமாக என்னுடைய மகனின் உடலை வாங்கவே மாட்டேன்” எனவும் உறுதியாக கூறினார்.
இதனைத் தொடர்ந்து  24 மணி நேரத்திற்குள் கிருஷ்ணவேணியை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் உறுதி அளித்துள்ளார்.  இதையடுத்து, மறியல் போராட்டம் தற்காலிகமாக காலை 11:30 மணிக்கு  வாபஸ் பெறப்பட்டது. நேற்று இந்தச் சம்பவம் தொடர்பாக கவினின் தந்தையை கைது செய்ததாகக் காவல்துறை தெரிவித்தது.   

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?