பரந்தூர் மக்களுக்கு நீதி கிடைக்குமென்றால் விஜய் கூறியதை வரவேற்கிறேன்... திருமாவளவன் உறுதி!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங். அவரது முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பொத்தூரில் உள்ள நினைவிடத்தில் அவரது சிலை திறக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்று மரியாதை செலுத்தினார்.
விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பில், “திமுகவைப் பற்றி பேசிய விஜய், அதிமுகவை பற்றி ஏன் பேசவில்லை என்று தெரியவில்லை. திமுக, பாஜக மீது எதிர்ப்பு, ஆனால் அதிமுகவை தோழமை கட்சியாக விஜய் கருதுவது போல் தெரிகிறது. தமிழர்களுக்கு எதிரானது என்ற முறையில் பாஜகவை தவெக தலைவர் விஜய் எதிர்க்கிறார். தவெகவின் கொள்கை எதிரி பட்டியலில் அதிமுக உள்ளதா? இல்லையா? ஆளுங்கட்சியான திமுகவை எதிர்ப்பது இயல்பானது.
பாமக இரண்டாகப் பிரிய வாய்ப்பே இல்லை. ராமதாசும் அன்புமணியும் ஒன்றாக இணைந்து தேர்தலை சந்திப்பார்கள். பரந்தூர் மக்களுடன் கோட்டை நோக்கிச் சென்று போராடுவேன் என தவெக தலைவர் விஜய் கூறுகிறார். பரந்தூர் மக்களுக்கு நீதி கிடைக்குமென்றால் விஜய் கூறியதை வரவேற்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!