எதிர்கட்சிகளின் அமளி நீடித்தால் விவாதமில்லாமலேயே மசோதாக்கள் நிறைவேற்றப்படும்... கிரண் ரிஜ்ஜு பகிரங்க எச்சரிக்கை!

 
நாடாளுமன்றம் கிரண் ரிஜ்ஜு

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் அமளி தொடர்ந்து நீடித்தால், விவாதம் இல்லாமலேயே மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என  நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றம் மக்களவை மாநிலங்களவை பாராளுமன்றம்  
இது குறித்து நேற்றைய தினம், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் நடத்தை காரணமாக முக்கிய மசோதாக்கள் மீதான விவாதங்கள் தடைபட்டு வருகின்றன. இதனால்  நாடாளுமன்ற செயல்பாடுகள் முற்றிலும் பாதிக்கப்படுகின்றன என  கவலை தெரிவித்தார்.

நாடாளுமன்றம்
குறிப்பாக, ராஷ்ட்ரிய கேள விநியாசக் பில் மற்றும் ராஷ்ட்ரிய டோபிங் ரோதி சன்ஷோதன் பில் போன்ற மசோதாக்கள் மீது விவாதிக்க ஒப்புக்கொண்டிருந்த போதிலும், எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக அது சாத்தியமாகவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.  இதற்கு முன்னதாக, ஜூலை 28 ம் தேதி  எதிர்க்கட்சிகள் பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து விவாதம் கோரியதாகவும், ஆனால் அவர்கள் விவாதத்தில் இருந்து தவிர்க்க முயற்சிப்பதாகவும் கிரண் ரிஜ்ஜு குற்றம் சாட்டினார்.  ஆபரேஷன் சிந்தூர் போன்ற முக்கிய விவகாரங்களில் விவாதத்திற்கு ஒப்புக்கொண்ட பிறகும், எதிர்க்கட்சிகள் அவையை முடக்கி வருவதாக விளக்கம் அளித்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?