மனைவி இல்லைன்னா புருஷனே கிடையாது... சொத்தில் சரிபாதி உரிமை உண்டு.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

 
கணவன் மனைவி பிற பெண்கள் சைட்

திருமணத்திற்கு பிறகு கணவன் சம்பாதித்த சொத்தில் சரிபாதி மனைவிக்கும் உரிமை உண்டு. அவனை வழிநடத்துவது, குடும்பத்தைப் பார்த்துக் கொள்வது, குழந்தைகளைப் பராமரிப்பது போன்றவைகளில் மனைவியின் பங்களிப்பு முழுவதும் இருப்பதால் தான் கணவனால் பொருளீட்ட முடிகிறது. அதனால், மனைவிக்கு சரி பாதி உரிமை உண்டு என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. மனைவிக்கு தனது சொத்தில் பங்கு பெற உரிமையில்லை என்று தொடரப்பட்ட வழக்கில் இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

கணவன் மனைவி இடையே ஏற்படும் சச்சரவால் குடும்ப வன்முறை, குடும்ப தகராறு போன்றவையும் அதிகரித்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில் விவாகரத்து, ஜீவனாம்சம் போன்ற குடும்ப பிரச்னைக்கான சட்ட ரீதியான அணுகலும் அதிகரித்துள்ளது. இது கவலையளிப்பதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் ஆண்களுக்கு சமமாக அனைத்து துறைகளில் பெண்களும் பணிபுரிந்து வருகின்றனர். ஆனால் சில ஊரக பகுதிகளில் பெண்களுக்கான உரிமைகள் பறிக்கப்படுவதாக சொல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டிருந்தது. வெளிநாட்டில் வேலை பார்த்து அனுப்பி வைத்த தொகையை பயன்படுத்தி வாங்கி சொத்துக்களில் மனைவிக்கு உரிமையில்லை எனக் கூறி கணவர் இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

work

இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கூறியதாவது, “குழந்தைகளை கவனிப்பது, குடும்பத்தை நிர்வகிப்பது என விடுமுறையில்லாமல் இல்லத்தரசி பார்க்கும் வேலை, 24 மணி நேர வேலையாகும். அதை கணவனின் எட்டு மணி நேர உத்தியோகத்துடன் ஒப்பிட முடியாது.

கணவன் சம்பாதிப்பதும், மனைவி குழந்தைகள் குடும்பத்தை கவனிப்பதும் பொதுவானது. குடும்பத்தை மனைவி கவனிப்பதால்தான் கணவரால் தனது பணியை செய்ய முடிகிறது என்பதால், கணவனின் சம்பாத்தியத்தில் வாங்கும் சொத்தில் இல்லத்தரசிக்கும் சமபங்கு பெற உரிமை உள்ளது.

குடும்பத்தையும், குழந்தைகளையும் கவனிப்பதன் மூலம், குடும்ப மருத்துவர் போல, 24 மணி நேரமும், விடுமுறையில்லாமல் ஒரு இல்லத்தரசி மேற்கொள்ளும் பணியை, சம்பாத்தியத்திற்காக கணவன் பார்க்கும் 8 மணி நேர வேலையுடன் ஒப்பிட முடியாது.

judgement

கணவனும், மனைவியும் குடும்ப வாகனத்தின் இரட்டை சக்கரங்கள். கணவன் சம்பாத்தியம் மூலம் தன் பங்கை வழங்கினால், குடும்பத்தை கவனித்து இல்லத்தரசியாக இருக்கக்கூடிய மனைவி தன் பங்களிப்பை வழங்குவதால், சொத்தில் மனைவிக்கும் உரிமை உள்ளது.

கணவனும், மனைவியும் குடும்ப வாகனத்தின் இரட்டை சக்கரங்கள். கணவன் சம்பாத்தியம் மூலம் தன் பங்கை வழங்கினால், குடும்பத்தை கவனித்து இல்லத்தரசியாக இருக்கக்கூடிய மனைவி தன் பங்களிப்பை வழங்குவதால், சொத்தில் மனைவிக்கும் உரிமை உள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

From around the web