“உசுரு போனா தான் நடவடிக்கை எடுப்பாங்க...” அரசு பேருந்திலிருந்து கீழே விழுந்த மாணவர்கள்... கண்டுகொள்ளாத டிரைவர்!

 
ஐகிரவுண்டு

நேற்று அரசு பேருந்தில் பயணம் செய்துக் கொண்டிருந்த பள்ளி மாணவர்கள், பேருந்தில் இருந்து கீழே விழுந்ததால் நெல்லையில் பரபரப்பு ஏற்பட்டது. இதில் பேருந்தின் டயருக்குள் சிக்காமல் பள்ளி மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் பேருந்து பற்றாக்குறை இருந்து வருகிறது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் பேருந்து பற்றாக்குறை காரணமாக ஒரே பேருந்தில் நிற்கக்கூட இடமில்லாத நிலையில் சாகச பயணம் மேற்கொண்டு வரும் அவல நிலை பல வருடங்களாகவே தமிழகத்தில் இருந்து வருகிறது. 

இந்நிலையில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு சாலையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றின் முன்பாக மாணவர்கள் பேருந்துக்காக காத்திருந்தனர். 

அப்போது அந்த வழியாக வந்த அரசு பேருந்தில் பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக மாணவர்கள் முண்டியடித்து ஏறினர். அந்த பேருந்தின் முன்பக்க கதவு மூடப்பட்டிருந்த நிலையில் பின்பக்க கதவு வழியாக ஒரே வழியில் அனைவரும் ஏறும் நிலை இருந்துள்ளது.

இந்நிலையில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரே நேரத்தில் பேருந்தில் ஏறிய போது அடுத்தடுத்து பேருந்தின் அடிப்பகுதியில் மாணவர்கல் ஒருவர் பின் ஒருவராக கீழே விழுந்துள்ளனர். மாணவர்கள் கீழே விழுந்த போதிலும், பேருந்தின் ஓட்டுநர் கொஞ்சமும் தயங்காமல் தொடர்ந்து பேருந்தை இயக்கி சென்றுள்ளார். இதில் சில மாணவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக பேருந்தின் டயருக்குள் மாணவர்கள் யாரும் சிக்காமல் உயிர் தப்பி உள்ளனர்.

ஐகிரவுண்டு

இந்த காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள நிலையில், அந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது. 

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாணவர்கள் நலன் மீது அக்கறை இல்லாமல் பேருந்தை ஓட்டுநர் ஓட்டிச்சென்றதாக சமூக வலைதளத்தில் மக்கள் குற்றச்சாட்டி உள்ளனர். “இந்த அரசு உசுரு போனா மட்டும் தான் நடவடிக்கை எடுக்கும். அதிகாரிகளும் அதன் பின்னர் தான் குழு அமைத்து கண்காணிப்பார்கள்” என்று பொதுமக்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

 

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web