விஜய் அழைத்தால்.. நான் ரெடி.. கட்சியில் இணைவது குறித்து அமீர் பளீர் பேட்டி!

அமீர் தமிழ் திரையுலகில் ஒரு இயக்குநரும் நடிகரும் ஆவார். சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமீர், விஜய் அழைத்தால் கண்டிப்பாக அவரது கட்சியில் இணைவேன் என்று பதிலளித்தார். திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் நடைபெற்ற கடை திறப்பு விழாவில் இயக்குனர் அமீர் கலந்து கொண்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, "கிராம மக்கள்தான் இந்தியாவின் முதுகெலும்பு. திரைத்துறையில் கிராமங்கள் இல்லாமல் எந்தப் படத்தையும் எடுக்க முடியாது. அரசியலில் அவர்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்" என்றார். “அரசியலுக்கு வந்தாலும் என்னால் வரமுடியும்.என் உள் உணர்வு சொல்கிறது.விஜய் என்னை அழைத்தால் கண்டிப்பாக செல்வேன்.என்னை பொறுத்தவரை விஜய் மற்றும் சீமானுடன் இணைந்து அரசியல் பயணத்தில் ஈடுபட தயாராக உள்ளேன்.தமிழகம் மத்திய பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டது.
“மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்பது தெளிவாகத் தெரிகிறது.தமிழகம் புறக்கணிக்கப்படுவதற்கு சில அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்தது வேதனையளிக்கிறது.மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் சமமாக நடத்த வேண்டும்.அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு முதல் அமைச்சர்.பதவி கொடுத்தால் மகிழ்ச்சி. " மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது.ஆளும் கட்சிக்கு எதிராக அரசியல் செய்யும் எதிர்க்கட்சிகள் சட்டம் ஒழுங்கு பற்றி தான் பேச முடியும்,'' என்றார்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!