பிரபல நடிகர் இயக்குநர் சுந்தர்ராஜன் மீது கமிஷ்னர் அலுவலகத்தில் புகார்... கோடம்பாக்கத்தில் பரபரப்பு!

 
சுந்தர்ராஜன்

கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்தவர் ரங்கதாஸ்(64). பிரபல திரைப்பட இயக்குநர் பாக்யராஜிடம் உதவி வசன கர்த்தாவாக பணியாற்றி வருகிறார். நேற்று ரங்கதாஸ் பிரபல இயக்குநரும் நடிகருமான ஆர்.சுந்தர்ராஜன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். 

இந்த விவகாரம் தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரங்கதாஸ் அளித்த புகார் மனுவில், நான் கடந்த 2000-ஆம் ஆண்டு நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகு சினிமா இயக்குநர் கே.பாக்யராஜிடம் உதவி வசனகர்த்தாவாக பணியாற்றி வருகிறேன். அப்போது சினிமா இயக்குநரும், நடிகருமான ஆர்.சுந்தர்ராஜன் அறிமுகமானார். 

சுந்தர்ராஜன்

பின்னர் இருவரும் நண்பர்களாக பழகி வந்த நேரத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இயக்குநர் சுந்தர்ராஜன் தன்னிடம் வந்து அடமானம் வைத்த என் வீடு மூழ்கும் தருவாயில் உள்ளது. வீடு மீது வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் வீடு கையை விட்டு போய்விடும். ஆகையால் 20 லட்ச ரூபாய் கடனாக வேண்டும் என்று கேட்டார்.

இயக்குநர் சுந்தர்ராஜன் கூறியதை நம்பி என் சேமிப்பு தொகையில் இருந்து 20 லட்ச ரூபாயை எடுத்து கடந்த 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவருக்கு கடனாக வழங்கினேன். பின்னர் பணத்தை பெற்று கொண்ட இயக்குநர் சுந்தர்ராஜன் குறிப்பிட்டது போல் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி வருகிறார். பணத்தை திருப்பி கேட்டால் மிரட்டல் விடுப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தரவேண்டும், குறிப்பிட்டுள்ளார்.

சுந்தர்ராஜன்

இவரது புகாரின் பேரில் விருகம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே பதிலுக்கு இயக்குநர் சுந்தர்ராஜனும் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், நெய்வேலியை சேரந்த ரங்கதாஸிடம் 20 லட்ச ரூபாய் கடனாக பெற்றேன். குறிப்பிட்டு கால அவகாசத்தில் பணத்தை அவருக்கு திருப்பி தர இயலவில்லை. ஆகையால் அதற்குண்டான வட்டியை மாதம் மாதம் தவறாமல் கொடுத்து வருகிறேன். 

இருப்பினும் ரங்கதாஸ் அடிக்கடி வீட்டிற்கு வந்து பணத்தை கேட்டு தொல்லை கொடுத்து, மிரட்டுவதால், மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. எனவே ரங்கதாஸ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என கேட்டுக்கொண்டுள்ளார். இருதரப்பினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web