‘இப்படியே தொடர்ந்தால் உங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படும்’.. மேற்கு நாடுகளை எச்சரித்த ரஷ்ய அதிபர்!

 
புதின்

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இதில் இரு தரப்பிலும் மக்களும் ராணுவ வீரர்களும் செத்து மடிகின்றனர். அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற சில ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக உள்ளன. இந்நிலையில் சமீபத்தில் ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியது. அதில், ஜெர்மனியின் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன.

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதகல்

ரஷ்யாவைத் தாக்க உக்ரைன் ஜெர்மன் ஆயுதங்களைப் பயன்படுத்துவது ஆபத்தான நடவடிக்கை என்று ரஷ்ய அதிபர் புதின் கூறினார். மேற்கு நாடுகளைத் தாக்க ரஷ்யா வேறு சில நாடுகளுக்கு நீண்ட தூர ஆயுதங்களை வழங்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார். ரஷ்யாவுக்கு எதிரான தாக்குதலில் உக்ரைன் ஜெர்மனி ஆயுதங்களைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

புதின்

இந்த குற்றச்சாட்டை தெரிவித்த ரஷ்யா ஜெர்மனிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. நமது நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அணு ஆயுதங்களை பயன்படுத்த தயாராக உள்ளோம் என புதின் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ரஷ்யாவின் சில பகுதிகளை குறிவைக்கக்கூடிய நீண்ட தூர ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்க அமெரிக்காவும் ஜெர்மனியும் சமீபத்தில் ஒப்புதல் அளித்தன.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web