’மசூதிக்கு சென்றால் புனிதம் கெட்டு போகும்’.. பாஜக எம்.எல்.ஏ பேச்சால் வெடித்த சர்ச்சை!

 
பாஜக எம்எல்ஏ ராஜா சிங்

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் வாவர் மசூதிக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என பாஜக எம்எல்ஏ ஒருவர் கூறியது சர்ச்சையை கிளப்பியுள்ளார். தெலுங்கானா மாநிலம் கோஷாமஹால் தொகுதி எம்எல்ஏவாக இருக்கும் ராஜா சிங் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, ​​“கேரளாவில் உள்ள சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் தங்கள் யாத்திரையின் போது எந்த மசூதிக்கும் செல்லக்கூடாது. ஐயப்ப தீட்சை விதிகளை பக்தர்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

சபரிமலை

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் அங்குள்ள வாவர் மசூதிக்கு செல்லக்கூடாது. அப்படிச் செய்தால் அவர்களின் புனிதம் கெட்டு, தூய்மையற்றவர்களாகி விடுவார்கள். சபரிமலை பக்தர்களை மசூதிக்கு செல்லச் சொல்வது சதி” என்றார். பாஜக எம்எல்ஏவின் இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கேரளாவின் எருமேலியில் அமைந்துள்ள வாவர் மசூதி, ஐயப்ப பக்தர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. சபரிமலை கோயிலுக்கு நடைபயணம் தொடங்கும் முன் பக்தர்கள் பாரம்பரியமாக இந்த மசூதிக்குச் செல்வது வழக்கம். சபரிமலை யாத்திரையின் இன்றியமையாத பகுதியாக வாவர் மசூதியில் வழிபாடு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web