ஒரே மொபைலில் 2 சிம் கார்டு இருந்தால் கூடுதல் கட்டணம்?... டிராய் விளக்கம்!

 
இரட்டை சிம்


தற்போதைய வாழ்க்கை முறையில் கையில் ஆறாம் விரலாய் அனைவரது கையிலும் மொபைல் போன். இவைகளின் பயன்பாடு அத்தியாவசியமாகி விட்டது. உணவில்லாமல் கூட இருந்துவிடுவர். செல்போன்கள் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலை உருவாகி விட்டது. செல்போன் பயன்படுத்தும் பெரும்பாலான நபர்கள் பல சிம்கார்டுகளை பயன்படுத்தி வருகிறார்கள். ஒரு சிலர் தனித்தனியான ஃபோன்களில் சிம் கார்டுகளை பயன்படுத்துகின்றனர். பெரும்பாலும்  ஒரே மொபைல் போனில் இரண்டு சிம் கார்டுகளை பயன்படுத்துகிறார்கள்.

சிம் கார்டுகள்

இந்நிலையில் ஒரே மொபைலில் 2 சிம் கார்டுகள் பயன்படுத்தினால் கட்டணம் செலுத்த வேண்டும் என சமீபத்தில் செய்தி  வெளியானது. இதற்கு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. அதில் ”2022ல்  தொலைத்தொடர்புத் துறை நிறுவனங்கள் இது போன்ற பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தேசிய எண் திட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அனுமதி கேட்டதாகவும் டிராய் தெரிவித்துள்ளது.

டிராய்

தற்போது நடைமுறையில் இருக்கும் சில திட்டங்கள் மற்றும் எதிர்கால தேவைகளுக்கான வளங்களை உறுதி செய்வதே இதன் நோக்கம். இந்நிலையில் ஒன்றுக்கும் மேற்பட்ட சிம்கார்டு வைத்திருப்பவர்கள்  கூடுதல் கட்டணங்கள் செலுத்த வேண்டும் என வெளியான தகவல் பொய் என தெரிவித்துள்ளது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web